ஹதீஸ்கள்
#4990
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘ஸைதை அழைத்துவாருங்கள். அவர் தம்முடன் ‘பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு’ அல்லது ‘அகலமான எலும்பு, மைக்கூடு’ ஆகியவற்றை எடுத்துவரட்டும்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் வந்தபோது,) ‘‘இந்த (4:95ஆவது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களது முதுகுக்குப் பின்னால், கண்பார்வையற்றவரான அம்ர் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!” என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில், ‘தக்க காரணமின்றி’ எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) அருளப்பெற்றது.14 அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء، قال لما نزلت {لا يستوي القاعدون من المومنين والمجاهدون في سبيل الله} قال النبي صلى الله عليه وسلم " ادع لي زيدا وليجي باللوح والدواة والكتف او الكتف والدواة ثم قال " اكتب لا يستوي القاعدون " وخلف ظهر النبي صلى الله عليه وسلم عمرو بن ام مكتوم الاعمى قال يا رسول الله فما تامرني فاني رجل ضرير البصر فنزلت مكانها {لا يستوي القاعدون من المومنين} في سبيل الله {غير اولي الضرر}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #4990
- Book Index
- 12
Grades
- -
