ஹதீஸ்கள்
#4984
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் பின் ஸாபித், சயீத் பின் அல்ஆஸ், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரியான ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாத குறைஷியரான மற்ற மூவரிடமும்), ‘‘நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபிமொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், குறைஷியரின் மொழி வழக்கிலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது” என்று சொன்னார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர்.6 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، حدثنا شعيب، عن الزهري، واخبرني انس بن مالك، قال فامر عثمان زيد بن ثابت وسعيد بن العاص وعبد الله بن الزبير وعبد الرحمن بن الحارث بن هشام ان ينسخوها، في المصاحف وقال لهم اذا اختلفتم انتم وزيد بن ثابت في عربية من عربية القران فاكتبوها بلسان قريش، فان القران انزل بلسانهم ففعلوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #4984
- Book Index
- 6
Grades
- -
