Loading...
Loading...
நூல்கள்
504 ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 அத்தியாயம் :
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோ...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்...
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான். அத்தியாயம...
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8 அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” எ...
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அ...
அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அ...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்து...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும்...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின்வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். “இறைநம்பிக்கை...
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்த...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பா...
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” என...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க் கூடாது...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும்...
ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத்...