Loading...
Loading...
நூல்கள்
525 ஹதீஸ்கள்
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?” என்று அவர்களிடம் வினவப்பட்டது. “பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நபி...
சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (அறியாமைக் காலத்தில் இணை வைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா,...
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ர் போரிலும் கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்...
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களது அவைக்குச் சென்றேன். நான் அவர்களது அவையில் (கலந்துகொண்டு, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான (மற்ற அனைத்)த...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தமது படையினரையும் மிகப் பெருந் தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (இறைமறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு வெற...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களில் யார் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்துகொள்ளாமல் (தமது இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறார்களோ அவர்களும், யார் தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில்...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் (பத்ர் போரின்போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ர் போரில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.) அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ர் போரின்போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ர் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலா...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட நபித் தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களுடைய தோழர்களின் எண்ணிக...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களான நாங்கள் பேசிக்கொள்வோம்: பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்க...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரா...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனைவிடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னை...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போர் முடிந்தபோது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்க...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்க...
பத்ர் போரில் அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வாயிலாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் நபராக இரு...
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்ப...
அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது. அத்தியாயம் :