Loading...

Loading...
நூல்கள்
௧௩௬ ஹதீஸ்கள்
حدثني عمرو بن علي، حدثنا ابن ابي عدي، عن ابي يونس القشيري، عن ابن ابي مليكة، ان ابن عمر، كان يقتل الحيات ثم نهى قال ان النبي صلى الله عليه وسلم هدم حايطا له، فوجد فيه سلخ حية فقال " انظروا اين هو ". فنظروا فقال " اقتلوه ". فكنت اقتلها لذلك. فلقيت ابا لبابة فاخبرني ان النبي صلى الله عليه وسلم قال " لا تقتلوا الجنان، الا كل ابتر ذي طفيتين، فانه يسقط الولد، ويذهب البصر، فاقتلوه
حدثني عمرو بن علي، حدثنا ابن ابي عدي، عن ابي يونس القشيري، عن ابن ابي مليكة، ان ابن عمر، كان يقتل الحيات ثم نهى قال ان النبي صلى الله عليه وسلم هدم حايطا له، فوجد فيه سلخ حية فقال " انظروا اين هو ". فنظروا فقال " اقتلوه ". فكنت اقتلها لذلك. فلقيت ابا لبابة فاخبرني ان النبي صلى الله عليه وسلم قال " لا تقتلوا الجنان، الا كل ابتر ذي طفيتين، فانه يسقط الولد، ويذهب البصر، فاقتلوه
حدثنا مالك بن اسماعيل، حدثنا جرير بن حازم، عن نافع، عن ابن عمر، انه كان يقتل الحيات. فحدثه ابو لبابة، ان النبي صلى الله عليه وسلم نهى عن قتل جنان البيوت، فامسك عنها
حدثنا مالك بن اسماعيل، حدثنا جرير بن حازم، عن نافع، عن ابن عمر، انه كان يقتل الحيات. فحدثه ابو لبابة، ان النبي صلى الله عليه وسلم نهى عن قتل جنان البيوت، فامسك عنها
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها عن النبي صلى الله عليه وسلم قال " خمس فواسق يقتلن في الحرم الفارة، والعقرب، والحديا، والغراب، والكلب العقور
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றை (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டிய ஒருவர் கொன்றுவிட் டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. தேள், எலி, வெறிநாய், (நீர்க்) காகம், பருந்து ஆகியவைதான் அவை. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، اخبرنا مالك، عن عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " خمس من الدواب من قتلهن وهو محرم فلا جناح عليه العقرب، والفارة، والكلب العقور، والغراب، والحداة
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும். தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد بن زيد، عن كثير، عن عطاء، عن جابر بن عبد الله رضى الله عنهما رفعه قال " خمروا الانية، واوكوا الاسقية، واجيفوا الابواب، واكفتوا صبيانكم عند العشاء، فان للجن انتشارا وخطفة، واطفيوا المصابيح عند الرقاد، فان الفويسقة ربما اجترت الفتيلة فاحرقت اهل البيت ". قال ابن جريج وحبيب عن عطاء فان للشياطين
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدة بن عبد الله، اخبرنا يحيى بن ادم، عن اسراييل، عن منصور، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في غار فنزلت {والمرسلات عرفا} فانا لنتلقاها من فيه، اذ خرجت حية من جحرها فابتدرناها لنقتلها، فسبقتنا فدخلت جحرها، فقال رسول الله صلى الله عليه وسلم " وقيت شركم، كما وقيتم شرها ". وعن اسراييل عن الاعمش عن ابراهيم عن علقمة عن عبد الله مثله قال وانا لنتلقاها من فيه رطبة. وتابعه ابو عوانة عن مغيرة. وقال حفص وابو معاوية وسليمان بن قرم عن الاعمش عن ابراهيم عن الاسود عن عبد الله
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118 அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا نصر بن علي، اخبرنا عبد الاعلى، حدثنا عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " دخلت امراة النار في هرة ربطتها، فلم تطعمها، ولم تدعها تاكل من خشاش الارض ". قال وحدثنا عبيد الله عن سعيد المقبري عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم مثله
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن ابي اويس، قال حدثني مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " نزل نبي من الانبياء تحت شجرة فلدغته نملة، فامر بجهازه فاخرج من تحتها، ثم امر ببيتها فاحرق بالنار، فاوحى الله اليه فهلا نملة واحدة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان بن بلال، قال حدثني عتبة بن مسلم، قال اخبرني عبيد بن حنين، قال سمعت ابا هريرة رضى الله عنه يقول قال النبي صلى الله عليه وسلم " اذا وقع الذباب في شراب احدكم فليغمسه، ثم لينزعه، فان في احدى جناحيه داء والاخرى شفاء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الحسن بن الصباح، حدثنا اسحاق الازرق، حدثنا عوف، عن الحسن، وابن، سيرين عن ابي هريرة رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال " غفر لامراة مومسة مرت بكلب على راس ركي يلهث، قال كاد يقتله العطش، فنزعت خفها، فاوثقته بخمارها، فنزعت له من الماء، فغفر لها بذلك
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121 இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال حفظته من الزهري كما انك ها هنا اخبرني عبيد الله عن ابن عباس عن ابي طلحة رضى الله عنهم عن النبي صلى الله عليه وسلم قال " لا تدخل الملايكة بيتا فيه كلب ولا صورة
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم امر بقتل الكلاب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن يحيى، قال حدثني ابو سلمة، ان ابا هريرة رضى الله عنه حدثه قال قال رسول الله صلى الله عليه وسلم " من امسك كلبا ينقص من عمله كل يوم قيراط، الا كلب حرث او كلب ماشية
சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا سليمان، قال اخبرني يزيد بن خصيفة، قال اخبرني السايب بن يزيد، سمع سفيان بن ابي زهير الشنيي، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " من اقتنى كلبا لا يغني عنه زرعا ولا ضرعا، نقص من عمله كل يوم قيراط ". فقال السايب انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم قال اي ورب هذه القبلة