ஹதீஸ்கள்
#3316
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும். தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد بن زيد، عن كثير، عن عطاء، عن جابر بن عبد الله رضى الله عنهما رفعه قال " خمروا الانية، واوكوا الاسقية، واجيفوا الابواب، واكفتوا صبيانكم عند العشاء، فان للجن انتشارا وخطفة، واطفيوا المصابيح عند الرقاد، فان الفويسقة ربما اجترت الفتيلة فاحرقت اهل البيت ". قال ابن جريج وحبيب عن عطاء فان للشياطين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3316
- Book Index
- 122
Grades
- -
