ஹதீஸ்கள்
#3317
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3317
- Book Index
- 123
Grades
- -