Loading...

Loading...
நூல்கள்
௨௫ ஹதீஸ்கள்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்;2 அந்தப் படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்தப் படையின் (கைவச மிருந்த) கட்டுச்சாதங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம்பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்துவந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்துபோய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்துவந்தது. லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னபோது, இதைக் கேட்டுக்கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அதுவும் தீர்ந்துபோன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார்கள்லி பிறகு நாங்கள் கடல்வரை வந்துசேர்ந்துவிட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாட்கள் உண்டது. பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளி லிருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப் பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்பு களின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن وهب بن كيسان، عن جابر بن عبد الله رضى الله عنهما انه قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا قبل الساحل، فامر عليهم ابا عبيدة بن الجراح وهم ثلاثماية وانا فيهم، فخرجنا حتى اذا كنا ببعض الطريق فني الزاد، فامر ابو عبيدة بازواد ذلك الجيش فجمع ذلك كله فكان مزودى تمر، فكان يقوتنا كل يوم قليلا قليلا، حتى فني فلم يكن يصيبنا الا تمرة تمرة. فقلت وما تغني تمرة فقال لقد وجدنا فقدها حين فنيت. قال ثم انتهينا الى البحر فاذا حوت مثل الظرب، فاكل منه ذلك الجيش ثماني عشرة ليلة، ثم امر ابو عبيدة بضلعين من اضلاعه فنصبا، ثم امر براحلة فرحلت ثم مرت تحتهما فلم تصبهما
சலமா பின் அமர் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்துபோய்ப் பஞ்சத்திற்குள் ளானார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் (ஊர்தி) ஒட்டகங்களை அறுக்க அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதியளித் தார்கள். (வழியில்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?” என்று கேட்டார்கள்.3 பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களுடைய ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டுவரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டது.) மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டுவந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்துவைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து, அதில் வளம் வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். பிறகு தங்கள் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி மக்களை அழைத் தார்கள். மக்கள், தங்கள் இரு கைகளையும் குவித்து (உணவில் தங்கள் பங்கைப்) பெற்று (பாத்திரங்களை நிரப்பி)க் கொண் டார்கள். அனைவரும் உணவைப் பெற்றுக் கொண்டுவிட்ட பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுகின்றேன்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن مرحوم، حدثنا حاتم بن اسماعيل، عن يزيد بن ابي عبيد، عن سلمة رضى الله عنه قال خفت ازواد القوم واملقوا، فاتوا النبي صلى الله عليه وسلم في نحر ابلهم فاذن لهم، فلقيهم عمر فاخبروه فقال ما بقاوكم بعد ابلكم، فدخل على النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما بقاوهم بعد ابلهم. فقال رسول الله صلى الله عليه وسلم " ناد في الناس فياتون بفضل ازوادهم ". فبسط لذلك نطع، وجعلوه على النطع. فقام رسول الله صلى الله عليه وسلم فدعا وبرك عليه ثم دعاهم باوعيتهم فاحتثى الناس حتى فرغوا، ثم قال رسول الله صلى الله عليه وسلم " اشهد ان لا اله الا الله واني رسول الله
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பிரிக்கப்படும். (பிறகு சமைக்கப்படும்.) சூரியன் மறைவதற்குமுன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، حدثنا ابو النجاشي، قال سمعت رافع بن خديج رضى الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم العصر فننحر جزورا، فتقسم عشر قسم، فناكل لحما نضيجا قبل ان تغرب الشمس
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறப்போரின்போது அஷ்அரீ குலத்தார் பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி, மக்களின் உணவு (இருப்பு) குறைந்துபோய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர் களைச் சேர்ந்தவன்.4 இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا حماد بن اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، قال قال النبي صلى الله عليه وسلم " ان الاشعريين اذا ارملوا في الغزو، او قل طعام عيالهم بالمدينة جمعوا ما كان عندهم في ثوب واحد، ثم اقتسموه بينهم في اناء واحد بالسوية، فهم مني وانا منهم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ‘ஸகாத்’ தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதிய போது, ‘‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தம் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தாமே செலுத்திவிடுவாராயின், அவர் தம் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.5 அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن المثنى، قال حدثني ابي قال، حدثني ثمامة بن عبد الله بن انس، ان انسا، حدثه ان ابا بكر رضى الله عنه كتب له فريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم قال " وما كان من خليطين فانهما يتراجعان بينهما بالسوية
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி ஏற்பட்டது. அவர்கள் (போரில் கிடைத்த செல்வங்களாகச்) சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப் பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்த வுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி ஆணையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு நபி (ஸல்) அவர்கள், ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். அப்போது அவற்றில் ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்தது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. ஒரு மனிதர் (நபித்தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்று இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறி னார்கள். நான், ‘‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத் தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக் கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல் கிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.6 அத்தியாயம் :
حدثنا علي بن الحكم الانصاري، حدثنا ابو عوانة، عن سعيد بن مسروق، عن عباية بن رفاعة بن رافع بن خديج، عن جده، قال كنا مع النبي صلى الله عليه وسلم بذي الحليفة فاصاب الناس جوع فاصابوا ابلا وغنما. قال وكان النبي صلى الله عليه وسلم في اخريات القوم فعجلوا وذبحوا ونصبوا القدور، فامر النبي صلى الله عليه وسلم بالقدور فاكفيت، ثم قسم فعدل عشرة من الغنم ببعير فند منها بعير، فطلبوه فاعياهم، وكان في القوم خيل يسيرة فاهوى رجل منهم بسهم فحبسه الله ثم قال " ان لهذه البهايم اوابد كاوابد الوحش فما غلبكم منها فاصنعوا به هكذا ". فقال جدي انا نرجو او نخاف العدو غدا، وليست معنا مدى افنذبح بالقصب. قال " ما انهر الدم وذكر اسم الله عليه، فكلوه، ليس السن والظفر، وساحدثكم عن ذلك، اما السن فعظم واما الظفر فمدى الحبشة
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போது) தம் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا سفيان، حدثنا جبلة بن سحيم، قال سمعت ابن عمر رضى الله عنهما يقول نهى النبي صلى الله عليه وسلم ان يقرن الرجل بين التمرتين جميعا، حتى يستاذن اصحابه
ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்துசெல்வார்கள். அப்போது, ‘‘(இரண்டிரண்டாகச்) சேர்த்து உண்ணாதீர்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ஒருவர் தம் சகோதரரிடம் அனுமதிபெற்றால் தவிர (அவ்வாறு) சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن جبلة، قال كنا بالمدينة فاصابتنا سنة، فكان ابن الزبير يرزقنا التمر، وكان ابن عمر يمر بنا فيقول لا تقرنوا فان النبي صلى الله عليه وسلم نهى عن الاقران، الا ان يستاذن الرجل منكم اخاه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்பவரிடம், அந்த அடிமை யின் நியாயமான (முழு) விலையையும் எட்டுகின்ற (தொகையான)து இருந்தால், அவனை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த (தமது பங்கின்) அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார்.7 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை அறிவித்த அய்யூப் (ரஹ்) அவர்கள், ‘‘இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார் எனும் வாசகம் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் சொல்லா; அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، حدثنا عبد الوارث، حدثنا ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " من اعتق شقصا له من عبد او شركا او قال نصيبا وكان له ما يبلغ ثمنه بقيمة العدل، فهو عتيق، والا فقد عتق منه ما عتق ". قال لا ادري قوله عتق منه ما عتق. قول من نافع او في الحديث عن النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கின்றவர், (வசதியுடைய வராயின்) தமது செல்வத்தைக் கொண்டே அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையென்றால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ண யிக்கப்பட்டு, (மீதி பங்கை அடைப்பதற்கு) அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக் கப்பட வேண்டும். அவனால் தாங்க முடியாத சுமையைத் தரலாகாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، اخبرنا عبد الله، اخبرنا سعيد بن ابي عروبة، عن قتادة، عن النضر بن انس، عن بشير بن نهيك، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من اعتق شقيصا من مملوكه فعليه خلاصه في ماله، فان لم يكن له مال قوم المملوك، قيمة عدل ثم استسعي غير مشقوق عليه
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இறைவனின் விதிகளைக் கடைப்பிடிப்பவர், அவற்றை மீறி நடப்பவர் ஆகியோரின் நிலையானது, (கப்பலில் பயணம் செய்த) ஒரு கூட்டத்தாரின் நிலையைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் வேறுசிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்துசெல்ல வேண்டி யிருந்தது. (அதனால் மேலே இருந்தவர் களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘‘நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த்தளத்தில்) ஒரு துளை போட்டுக்கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாம லிருக்கலாம்’ என்று பேசிக்கொண் டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால், (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்துபோவார்கள். (துளையிட விடாமல்) அவர்களின் கரங்களைப் பிடித்துக்கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக்கொள் வார்கள். (அவர்களுடன் மற்ற) அனை வரும் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا زكرياء، قال سمعت عامرا، يقول سمعت النعمان بن بشير رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " مثل القايم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة، فاصاب بعضهم اعلاها وبعضهم اسفلها، فكان الذين في اسفلها اذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو انا خرقنا في نصيبنا خرقا، ولم نوذ من فوقنا. فان يتركوهم وما ارادوا هلكوا جميعا، وان اخذوا على ايديهم نجوا ونجوا جميعا
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவருடைய செல்வத்தில் அவளும் பங்காளியாக இருப்பாள். இந்நிலையில் அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மணக்கொடை விஷயத்தில் நீதியுடன் நடக்காமல், மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பதைப் போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக் காமல் அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணமுடித்துக்கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், ‘‘(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கோருகின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காட்டப்படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)” (4:127) எனும் வசனத்தை அருளினான். யிஇவ்வேதத்தில் (ஏற்கெனவே) உங்களுக்கு ஓதிக்காட்டப்படுகின்ற வசனம்’ என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது, ‘‘அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சி னால்...” எனும் (4:3) வசனத்தையே குறிக்கிறது. ‘அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது’ (4:127) எனும் பிந்திய வசனத்தின் தொடர், உங்களில் ஒரு காப்பாளர் தமது பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை, அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது விரும்பாமலிருப்பதைக் குறிக்கும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும்போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணமுடித்துக்கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் ‘நீதியான முறையில் தவிர மணமுடித்துக் கொள்ளலாகாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பிரிக்கப்படாத (கூட்டுச்சொத்து) ஒவ்வொன்றிலும்தான் விலைகோள் உரிமையை(ப் பங்காளிக்கு) ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்கப் பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டுவிட்டால் விலைகோள் உரிமை (பங்காளிக்குக்) கிடையாது.9 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن جابر بن عبد الله رضى الله عنهما قال انما جعل النبي صلى الله عليه وسلم الشفعة في كل ما لم يقسم، فاذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பங்கிடப்படாத (சொத்துகள்) ஒவ்வொன் றிலும் (பங்காளிக்கு) விலைகோள் உரிமையுண்டு என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப் பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டுவிட்டால் விலைகோள் உரிமை கிடையாது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الواحد، حدثنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن جابر بن عبد الله رضى الله عنهما قال قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم، فاذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة
சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர் களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘நானும் என் கூட்டாளியான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், யிஉடனுக்குடன் மாற்றிக்கொண்டதை எடுத்துக்கொள்ளுங்கள்; தவணை முறையில் மாற்றிக்கொண்டதை ரத்துச் செய்துவிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، عن عثمان يعني ابن الاسود، قال اخبرني سليمان بن ابي مسلم، قال سالت ابا المنهال عن الصرف، يدا بيد فقال اشتريت انا وشريك، لي شييا يدا بيد ونسيية، فجاءنا البراء بن عازب فسالناه، فقال فعلت انا وشريكي زيد بن ارقم، وسالنا النبي صلى الله عليه وسلم عن ذلك فقال " ما كان يدا بيد فخذوه، وما كان نسيية فذروه
சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர் களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘நானும் என் கூட்டாளியான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், யிஉடனுக்குடன் மாற்றிக்கொண்டதை எடுத்துக்கொள்ளுங்கள்; தவணை முறையில் மாற்றிக்கொண்டதை ரத்துச் செய்துவிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، عن عثمان يعني ابن الاسود، قال اخبرني سليمان بن ابي مسلم، قال سالت ابا المنهال عن الصرف، يدا بيد فقال اشتريت انا وشريك، لي شييا يدا بيد ونسيية، فجاءنا البراء بن عازب فسالناه، فقال فعلت انا وشريكي زيد بن ارقم، وسالنا النبي صلى الله عليه وسلم عن ذلك فقال " ما كان يدا بيد فخذوه، وما كان نسيية فذروه
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றி லிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது என்றும் நிபந்தனை யிட்டு (குத்தகைக்குக்) கொடுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية بن اسماء، عن نافع، عن عبد الله رضى الله عنه قال اعطى رسول الله صلى الله عليه وسلم خيبر اليهود ان يعملوها ويزرعوها ولهم شطر ما يخرج منها
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைக் கொடுத்து, அவற்றை குர்பானி கொடுப்பதற்காகத் தோழர்களிடையே பங்கிடும்படி சொன்னார் கள். (அவ்வாறே நான் பங்கிட்டுவிட்டேன்.) ஓர் ஆட்டுக் குட்டி எஞ்சியது. அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘‘அதை நீ குர்பானி கொடுத்துவிடு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اعطاه غنما يقسمها على صحابته ضحايا، فبقي عتود فذكره لرسول الله صلى الله عليه وسلم فقال " ضح به انت
நபித்தோழர் அப்துல் லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத் (ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனிடம் (இஸ்லாத்தின்படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் சிறுவராயிற்றே!” என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக்கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார் கள். அறிவிப்பாளர் ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடை வீதிக்கு அழைத்துச் சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். அப்போது அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும் சந்திப் பார்கள். அப்போது அவ்விருவரும், ‘‘எங்களை யும் (உணவு வணிகத்தில்) கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள் வளம் வேண்டி துஆ செய்துள்ளார்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர் களைக் கூட்டுச் சேர்த்துக்கொள்வார்கள். சில வேளைகளில், ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருட்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அவற்றை(த் தமது) வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். அத்தியாயம் :
حدثنا اصبغ بن الفرج، قال اخبرني عبد الله بن وهب، قال اخبرني سعيد، عن زهرة بن معبد، عن جده عبد الله بن هشام وكان قد ادرك النبي صلى الله عليه وسلم وذهبت به امه زينب بنت حميد الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله بايعه. فقال " هو صغير ". فمسح راسه ودعا له. وعن زهرة بن معبد، انه كان يخرج به جده عبد الله بن هشام الى السوق فيشتري الطعام فيلقاه ابن عمر وابن الزبير رضى الله عنهم فيقولان له اشركنا، فان النبي صلى الله عليه وسلم قد دعا لك بالبركة فيشركهم، فربما اصاب الراحلة كما هي، فيبعث بها الى المنزل
நபித்தோழர் அப்துல் லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத் (ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனிடம் (இஸ்லாத்தின்படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் சிறுவராயிற்றே!” என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக்கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார் கள். அறிவிப்பாளர் ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடை வீதிக்கு அழைத்துச் சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். அப்போது அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும் சந்திப் பார்கள். அப்போது அவ்விருவரும், ‘‘எங்களை யும் (உணவு வணிகத்தில்) கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள் வளம் வேண்டி துஆ செய்துள்ளார்கள்” என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர் களைக் கூட்டுச் சேர்த்துக்கொள்வார்கள். சில வேளைகளில், ஒரு முழு ஒட்டகம் (சுமக்கும் அளவுக்கு உணவுப் பொருட்கள்) அப்படியே அவர்களுக்கு (இலாபமாக)க் கிடைக்கும். அவற்றை(த் தமது) வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். அத்தியாயம் :
حدثنا اصبغ بن الفرج، قال اخبرني عبد الله بن وهب، قال اخبرني سعيد، عن زهرة بن معبد، عن جده عبد الله بن هشام وكان قد ادرك النبي صلى الله عليه وسلم وذهبت به امه زينب بنت حميد الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله بايعه. فقال " هو صغير ". فمسح راسه ودعا له. وعن زهرة بن معبد، انه كان يخرج به جده عبد الله بن هشام الى السوق فيشتري الطعام فيلقاه ابن عمر وابن الزبير رضى الله عنهم فيقولان له اشركنا، فان النبي صلى الله عليه وسلم قد دعا لك بالبركة فيشركهم، فربما اصاب الراحلة كما هي، فيبعث بها الى المنزل
حدثنا عبد العزيز بن عبد الله العامري الاويسي، حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، اخبرني عروة، انه سال عايشة رضى الله عنها وقال الليث حدثني يونس عن ابن شهاب قال اخبرني عروة بن الزبير انه سال عايشة رضى الله عنها عن قول الله تعالى {وان خفتم} الى {ورباع}. فقالت يا ابن اختي هي اليتيمة تكون في حجر وليها تشاركه في ماله، فيعجبه مالها وجمالها، فيريد وليها ان يتزوجها بغير ان يقسط في صداقها، فيعطيها مثل ما يعطيها غيره، فنهوا ان ينكحوهن الا ان يقسطوا لهن ويبلغوا بهن اعلى سنتهن من الصداق، وامروا ان ينكحوا ما طاب لهم من النساء سواهن. قال عروة قالت عايشة ثم ان الناس استفتوا رسول الله صلى الله عليه وسلم بعد هذه الاية فانزل الله {ويستفتونك في النساء} الى قوله {وترغبون ان تنكحوهن} والذي ذكر الله انه يتلى عليكم في الكتاب الاية الاولى التي قال فيها {وان خفتم ان لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء} قالت عايشة وقول الله في الاية الاخرى {وترغبون ان تنكحوهن} يعني هي رغبة احدكم ليتيمته التي تكون في حجره، حين تكون قليلة المال والجمال، فنهوا ان ينكحوا ما رغبوا في مالها وجمالها من يتامى النساء الا بالقسط من، اجل رغبتهم عنهن