ஹதீஸ்கள்
#2483
ஸஹீஹ் அல்-புகாரீ - Partnership
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்;2 அந்தப் படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்தப் படையின் (கைவச மிருந்த) கட்டுச்சாதங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம்பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்துவந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்துபோய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்துவந்தது. லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னபோது, இதைக் கேட்டுக்கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அதுவும் தீர்ந்துபோன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார்கள்லி பிறகு நாங்கள் கடல்வரை வந்துசேர்ந்துவிட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாட்கள் உண்டது. பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளி லிருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப் பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்பு களின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن وهب بن كيسان، عن جابر بن عبد الله رضى الله عنهما انه قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا قبل الساحل، فامر عليهم ابا عبيدة بن الجراح وهم ثلاثماية وانا فيهم، فخرجنا حتى اذا كنا ببعض الطريق فني الزاد، فامر ابو عبيدة بازواد ذلك الجيش فجمع ذلك كله فكان مزودى تمر، فكان يقوتنا كل يوم قليلا قليلا، حتى فني فلم يكن يصيبنا الا تمرة تمرة. فقلت وما تغني تمرة فقال لقد وجدنا فقدها حين فنيت. قال ثم انتهينا الى البحر فاذا حوت مثل الظرب، فاكل منه ذلك الجيش ثماني عشرة ليلة، ثم امر ابو عبيدة بضلعين من اضلاعه فنصبا، ثم امر براحلة فرحلت ثم مرت تحتهما فلم تصبهما
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Partnership
- Hadith Index
- #2483
- Book Index
- 1
Grades
- -
