Loading...

Loading...
நூல்கள்
௮௯ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.65 அத்தியாயம் :
حدثني عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا معمر، عن الزهري، عن سالم، عن عبد الله بن عمر، انهم كانوا يضربون على عهد رسول الله صلى الله عليه وسلم اذا اشتروا طعاما جزافا ان يبيعوه في مكانهم حتى ييووه الى رحالهم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமை களில்) எதற்காகவும் தமக்கென ஒரு போதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!66 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرني عروة، عن عايشة رضى الله عنها قالت ما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه في شىء يوتى اليه حتى تنتهك من حرمات الله فينتقم لله
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது.- நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்துகொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், “இவளை நான் என்னிடமே (மனைவி யாக) வைத்துக்கொண்டிருந்தால் நான் இவள்மீது சொன்ன குற்றச்சாட்டு பொய் யாகிவிடும்” என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) “அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால், அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன். பிறகு, ‘அந்தப் பெண் அருவருக்கத் தக்க தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்’ என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.67 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال الزهري عن سهل بن سعد، قال شهدت المتلاعنين وانا ابن خمس، عشرة، فرق بينهما فقال زوجها كذبت عليها ان امسكتها. قال فحفظت ذاك من الزهري " ان جاءت به كذا وكذا فهو، وان جاءت به كذا وكذا كانه وحرة فهو ". وسمعت الزهري يقول جاءت به للذي يكره
காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறை வேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்’ என்று கூறியது இந்தப் பெண் தொடர்பாகத்தானா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டாள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டுவந்த பெண் ஆவாள்” என்று கூறினார்கள்.68 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا ابو الزناد، عن القاسم بن محمد، قال ذكر ابن عباس المتلاعنين فقال عبد الله بن شداد هي التي قال رسول الله صلى الله عليه وسلم " لو كنت راجما امراة عن غير بينة ". قال لا، تلك امراة اعلنت
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்குமுன் ஒருநாள் மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச்சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், “நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள். -(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப்பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.- (இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். (இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவு கொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)” என்று பதிலளித்தார்கள்.69 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثنا يحيى بن سعيد، عن عبد الرحمن بن القاسم، عن القاسم بن محمد، عن ابن عباس رضى الله عنهما ذكر التلاعن عند النبي صلى الله عليه وسلم فقال عاصم بن عدي في ذلك قولا، ثم انصرف واتاه رجل من قومه يشكو انه وجد مع اهله فقال عاصم ما ابتليت بهذا الا لقولي فذهب به الى النبي صلى الله عليه وسلم فاخبره بالذي وجد عليه امراته، وكان ذلك الرجل مصفرا، قليل اللحم، سبط الشعر، وكان الذي ادعى عليه انه وجده عند اهله ادم، خدلا، كثير اللحم، فقال النبي صلى الله عليه وسلم " اللهم بين ". فوضعت شبيها بالرجل الذي ذكر زوجها انه وجده عندها فلاعن النبي صلى الله عليه وسلم بينهما فقال رجل لابن عباس في المجلس هي التي قال النبي صلى الله عليه وسلم " لو رجمت احدا بغير بينة رجمت هذه ". فقال لا، تلك امراة كانت تظهر في الاسلام السوء
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, தகுந்த காரணமின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.70 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا سليمان، عن ثور بن زيد، عن ابي الغيث، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " اجتنبوا السبع الموبقات ". قالوا يا رسول الله وما هن قال " الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله الا بالحق، واكل الربا، واكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المومنات الغافلات
அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நிரபராதியான தம் அடிமையின் மீது (விபசாரம் புரிந்துவிட்டதாக) அவதூறு கூறுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن فضيل بن غزوان، عن ابن ابي نعم، عن ابي هريرة رضى الله عنه قال سمعت ابا القاسم، صلى الله عليه وسلم يقول " من قذف مملوكه وهو بريء مما قال، جلد يوم القيامة، الا ان يكون كما قال
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது: (கிராமவாசி) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: நீங்கள் அல்லாஹ்வின் சட்டப்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்” என்று சொன்னார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “அவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். (பின்னர் அக்கிராமவாசி) “என்னைப் பேச அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “பேசு!” என்று கூறினார்கள். அவர், “என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத்தொகையாக வழங்கினேன். பிறகு அறிஞர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனை என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலம் நாடுகடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி, “உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று கேளுங்கள். அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே (உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க) அவளும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, உனைஸ் அவர்கள் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.71 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا ابن عيينة، عن الزهري، عن عبيد الله بن عبد الله بن عتبة، عن ابي هريرة، وزيد بن خالد الجهني، قالا جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال انشدك الله الا قضيت بيننا بكتاب الله. فقام خصمه وكان افقه منه فقال صدق، اقض بيننا بكتاب الله، واذن لي يا رسول الله. فقال النبي صلى الله عليه وسلم " قل ". فقال ان ابني كان عسيفا في اهل، هذا فزنى بامراته، فافتديت منه بماية شاة وخادم واني سالت رجالا من اهل العلم فاخبروني ان على ابني جلد ماية وتغريب عام، وان على امراة هذا الرجم. فقال " والذي نفسي بيده لاقضين بينكما بكتاب الله، الماية والخادم رد عليك، وعلى ابنك جلد ماية وتغريب عام، ويا انيس اغد على امراة هذا فسلها، فان اعترفت فارجمها ". فاعترفت فرجمها