Loading...

Loading...
நூல்கள்
௭௭ ஹதீஸ்கள்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந் திருந்தேன். அப்போது அவர்கள், “முஆதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்றுமுறை அழைத்துவிட்டு, “மக்கள்மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (எனக்குத் தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “மக்கள்மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது” என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். “அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.51 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن قتادة، عن انس، عن معاذ، قال انا رديف النبي، صلى الله عليه وسلم فقال " يا معاذ ". قلت لبيك وسعديك. ثم قال مثله ثلاثا " هل تدري ما حق الله على العباد ان يعبدوه ولا يشركوا به شييا ". ثم سار ساعة فقال " يا معاذ ". قلت لبيك وسعديك. قال " هل تدري ما حق العباد على الله اذا فعلوا ذلك ان لا يعذبهم ". حدثنا هدبة، حدثنا همام، حدثنا قتادة، عن انس، عن معاذ، بهذا
ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ‘ஹர்ரா’ பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! (இந்த) உஹுத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் ‘ஓர் இரவு’ அல்லது ‘மூன்று இரவுகள்’ கழிந்து செல்வதைக்கூட நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று சொன்னார்கள். -(இந்த இடத்தில் அபூதர்) தமது கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள்.- பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தமது செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!” என்று சொன்னார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நான் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “இந்த இடத்திலேயே இருங்கள்” என்று சொன் னது நினைவுக்கு வரவே, அங்கேயே இருந்துவிட்டேன். (நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்த தும்,) “அல்லாஹ்வின் தூதரே! ஏதோ குரலை நான் கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களது சொல்லை நினைவுகூர்ந்தேன். ஆகவே, (இங்கேயே) இருந்துவிட்டேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல்தான்). அவர் என்னிடம் வந்து ‘என் சமுதாயத்தாரில் யார் இறைவனுக்கு எதையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார்’ என்று தெரிவித்தார்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர் விபசாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஷிஹாப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “மூன்று நாட்களுக்குமேல் அந்தப் பொற்காசு (என்னிடம்) தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.52 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا زيد بن وهب، حدثنا والله ابو ذر، بالربذة كنت امشي مع النبي صلى الله عليه وسلم في حرة المدينة عشاء استقبلنا احد فقال " يا ابا ذر ما احب ان احدا لي ذهبا ياتي على ليلة او ثلاث عندي منه دينار، الا ارصده لدين، الا ان اقول به في عباد الله هكذا وهكذا وهكذا ". وارانا بيده. ثم قال " يا ابا ذر ". قلت لبيك وسعديك يا رسول الله. قال " الاكثرون هم الاقلون الا من قال هكذا وهكذا ". ثم قال لي " مكانك لا تبرح يا ابا ذر حتى ارجع ". فانطلق حتى غاب عني، فسمعت صوتا فخشيت ان يكون عرض لرسول الله صلى الله عليه وسلم فاردت ان اذهب، ثم ذكرت قول رسول الله صلى الله عليه وسلم " لا تبرح ". فمكثت قلت يا رسول الله سمعت صوتا خشيت ان يكون عرض لك، ثم ذكرت قولك فقمت. فقال النبي صلى الله عليه وسلم " ذاك جبريل اتاني، فاخبرني انه من مات من امتي لا يشرك بالله شييا دخل الجنة ". قلت يا رسول الله وان زنى وان سرق. قال " وان زنى وان سرق ". قلت لزيد انه بلغني انه ابو الدرداء. فقال اشهد لحدثنيه ابو ذر بالربذة. قال الاعمش وحدثني ابو صالح عن ابي الدرداء نحوه. وقال ابو شهاب عن الاعمش " يمكث عندي فوق ثلاث
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني مالك، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " لا يقيم الرجل الرجل من مجلسه، ثم يجلس فيه
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தமது இடத்திலிருந்து எழுந்துகொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا سفيان، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم انه نهى ان يقام الرجل من مجلسه ويجلس فيه اخر، ولكن تفسحوا وتوسعوا. وكان ابن عمر يكره ان يقوم الرجل من مجلسه، ثم يجلس مكانه
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது மக்களை (மணவிருந்துக்காக) அழைத்தார்கள். மக்கள் (வந்து) உணவருந்தியபின் பேசிக்கொண்டு (அங்கேயே) அமர்ந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லட்டும் என்ற எண்ணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தாம் எழுந்துபோகத் தயாராக இருப்பதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழவில்லை. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து (சென்று)விட்டார்கள். அவர்கள் எழுந்தபோது மக்களில் சிலரும் அவர்களுடன் எழுந்து (சென்று)விட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் எழாமல் எஞ்சி இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைய வந்தபோது அந்த மூவரும் அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (எனவே, நபி அவர்கள் தமது வீட்டுக்குள் நுழையவில்லை.) பிறகு, அந்த மூவரும் எழுந்து நடக்கலாயினர். உடனே நான் வந்து நபி (ஸல்) அவர்களிடம் அந்த மூவரும் சென்றுவிட்ட விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். நானும் வீட்டுக்குள் நுழையப்போனபோது நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்கும் இடையே திரையிட்டுவிட்டார்கள். மேலும், அல்லாஹ் (பர்தா தொடர்பான 33:53ஆவது) வசனத்தை அருளினான்.54 அத்தியாயம் :
حدثنا الحسن بن عمر، حدثنا معتمر، سمعت ابي يذكر، عن ابي مجلز، عن انس بن مالك رضى الله عنه قال لما تزوج رسول الله صلى الله عليه وسلم زينب ابنة جحش دعا الناس طعموا ثم جلسوا يتحدثون قال فاخذ كانه يتهيا للقيام فلم يقوموا، فلما راى ذلك قام، فلما قام قام من قام معه من الناس، وبقي ثلاثة، وان النبي صلى الله عليه وسلم جاء ليدخل فاذا القوم جلوس، ثم انهم قاموا فانطلقوا قال فجيت فاخبرت النبي صلى الله عليه وسلم انهم قد انطلقوا، فجاء حتى دخل فذهبت ادخل، فارخى الحجاب بيني وبينه، وانزل الله تعالى {يا ايها الذين امنوا لا تدخلوا بيوت النبي الا ان يوذن لكم} الى قوله {ان ذلكم كان عند الله عظيما}
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :
حدثنا محمد بن ابي غالب، اخبرنا ابراهيم بن المنذر الحزامي، حدثنا محمد بن فليح، عن ابيه، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال رايت رسول الله صلى الله عليه وسلم بفناء الكعبة محتبيا بيده هكذا
அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பெரும்பாவங்களி லேயே மிகப்பெரும் பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்), அல்லாஹ்வின் தூதரே” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும் பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا بشر بن المفضل، حدثنا الجريري، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " الا اخبركم باكبر الكباير ". قالوا بلى يا رسول الله. قال " الاشراك بالله، وعقوق الوالدين
பின்னர் சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்: பொய் பேசுவதும் (மிகப்பெரும் பாவம்தான்)” என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் “அவர்கள் நிறுத்தமாட்டார்களா?” என்றோம்.56 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر، مثله، وكان متكيا فجلس فقال " الا وقول الزور ". فما زال يكررها حتى قلنا ليته سكت
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவித்துவிட்டு உடனே (வழக்கத்திற்கு மாறாக) விரைவாகச் சென்று வீட்டுக்குள் நுழைந்தார்கள்.57 அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن عمر بن سعيد، عن ابن ابي مليكة، ان عقبة بن الحارث، حدثه قال صلى النبي صلى الله عليه وسلم العصر، فاسرع، ثم دخل البيت
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நடுவில் தொழுவார்கள். நான் அவர்களுக்கும் கிப்லாவிற்கும் இடையே படுத்துக்கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். எழுந்து அவர்களுக்கு முன்னே செல்ல விரும்பாமல் மெல்லத் தவழ்ந்தபடி செல்வேன்.58 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي وسط السرير، وانا مضطجعة بينه وبين القبلة تكون لي الحاجة، فاكره ان اقوم فاستقبله فانسل انسلالا
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் (என்னிடம்), நான் உங்கள் தந்தை ஸைத் (ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: நான் (அதிகமாக) நோன்பு நோற்பது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, (ஒருநாள்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (அவர்கள் சாய்ந்துகொள்வதற்காக) பேரீச்ச நாரால் நிரப்பப்பட்ட தலை யணையொன்றை வைத்தேன். ஆனால், அவர்கள் தரையின் மீதே அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. அப்போது அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நான் அதைவிட அதிக நாட்கள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)” என்றேன். அவர்கள், “ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்க)” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (அதைவிட அதிக நாள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)” என்று சொன்னேன். அவர்கள், “(மாதம் ஒன்றுக்கு) ஒன்பது நாட்கள் (நோற்றுக்கொள்க)” என்றார்கள். நான் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)” என்று சொன்னேன். அவர்கள், “பதினோரு நாட்கள் (நோன்பு நோற்றுக்கொள்க)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (அதைவிட அதிக நாள் நோன்பு நோற்கும் சக்தி பெற்றுள்ளேன்)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் (இறைத்தூதர்) தாவூத் அவர்களின் நோன்பைவிட மேலான நோன்பில்லை. (அது) ஒருநாள் நோன்பு நோற்பது; ஒருநாள் நோன்பில்லாமல் இருப்பது எனச் சரிபாதிக் காலம் ஆகும் என்றார்கள்.59 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، حدثنا خالد،. وحدثني عبد الله بن محمد، حدثنا عمرو بن عون، حدثنا خالد، عن خالد، عن ابي قلابة، قال اخبرني ابو المليح، قال دخلت مع ابيك زيد على عبد الله بن عمرو فحدثنا ان النبي صلى الله عليه وسلم ذكر له صومي، فدخل على، فالقيت له وسادة من ادم حشوها ليف، فجلس على الارض، وصارت الوسادة بيني وبينه، فقال لي " اما يكفيك من كل شهر ثلاثة ايام ". قلت يا رسول الله. قال " خمسا ". قلت يا رسول الله. قال " سبعا ". قلت يا رسول الله. قال " تسعا ". قلت يا رسول الله. قال " احدى عشرة ". قلت يا رسول الله. قال " لا صوم فوق صوم داود، شطر الدهر، صيام يوم، وافطار يوم
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குள் சென்று இரண்டு ரகஅத்கள் தொழுதுவிட்டு, “இறைவா! எனக்கு ஒரு (நல்ல) நண்பரைத் தந்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தேன். பிறகு (நபித்தோழர்) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்துகொண்டேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், ‘கூஃபாவாசி’ என்று சொன்னேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (தொடர்ந்து) அவர்கள், “தன் தூதரின் நாவால் யாரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (நபி (ஸல்) அவர்களின் பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும் தலையணையையும் சுமந்து சென்றவர் உங்களிடையே இல்லையா?” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (அவற்றுக்கெல்லாம் நான் ‘ஆம்’ எனப் பதிலளித்தேன். பிறகு,) அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்-ரலி) அவர்கள் “வல்லய்லீ இதா யஃக்ஷா” எனும் (அல்லைல் அத்தியாயத்தின்) வசனங்களை எப்படி ஓதிக்கொண்டிருந்தார்கள்?” என்று கேட்டார்கள். “வத்தகரி வல்உன்ஸா” என்று (‘வ மா கலக்க’ எனும் சொற்றொடர் இல்லாமல்தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அப்போது அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட இந்த ஓதல்முறை விஷயத்தில் என்னைக் குழப்பப்பார்க்கிறார்கள்” என்று சென் னார்கள்.60 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن جعفر، حدثنا يزيد، عن شعبة، عن مغيرة، عن ابراهيم، عن علقمة، انه قدم الشام. وحدثنا ابو الوليد، حدثنا شعبة، عن مغيرة، عن ابراهيم، قال ذهب علقمة الى الشام، فاتى المسجد فصلى ركعتين فقال اللهم ارزقني جليسا. فقعد الى ابي الدرداء فقال ممن انت قال من اهل الكوفة. قال اليس فيكم صاحب السر الذي كان لا يعلمه غيره يعني حذيفة اليس فيكم او كان فيكم الذي اجاره الله على لسان رسوله صلى الله عليه وسلم من الشيطان يعني عمارا اوليس فيكم صاحب السواك والوساد يعني ابن مسعود كيف كان عبد الله يقرا {والليل اذا يغشى}. قال {والذكر والانثى}. فقال ما زال هولاء حتى كادوا يشككوني، وقد سمعتها من رسول الله صلى الله عليه وسلم
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆ தொழுகைக்குப் பின்னால்தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்வோம்61 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، عن ابي حازم، عن سهل بن سعد، قال كنا نقيل ونتغدى بعد الجمعة
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தம் பெயர்களில்) ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் “உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக்கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பார்” என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, “அபூதுராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூதுராபே! எழுங்கள்” என்று (இரண்டு முறை) கூறினார்கள்.62 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابي حازم، عن سهل بن سعد، قال ما كان لعلي اسم احب اليه من ابي تراب، وان كان ليفرح به اذا دعي بها، جاء رسول الله صلى الله عليه وسلم بيت فاطمة عليها السلام فلم يجد عليا في البيت فقال " اين ابن عمك ". فقالت كان بيني وبينه شىء، فغاضبني فخرج فلم يقل عندي. فقال رسول الله صلى الله عليه وسلم لانسان " انظر اين هو " فجاء فقال يا رسول الله هو في المسجد راقد. فجاء رسول الله صلى الله عليه وسلم وهو مضطجع، قد سقط رداوه عن شقه، فاصابه تراب، فجعل رسول الله صلى الله عليه وسلم يمسحه عنه وهو يقول " قم ابا تراب، قم ابا تراب
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கெனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலை முடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி (ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது தமது கஃபன் (சவக்கோடி) துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு என்னிடம் இறுதிவிருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا محمد بن عبد الله الانصاري، قال حدثني ابي، عن ثمامة، عن انس، ان ام سليم، كانت تبسط للنبي صلى الله عليه وسلم نطعا فيقيل عندها على ذلك النطع قال فاذا نام النبي صلى الله عليه وسلم اخذت من عرقه وشعره، فجمعته في قارورة، ثم جمعته في سك قال فلما حضر انس بن مالك الوفاة اوصى ان يجعل في حنوطه من ذلك السك قال فجعل في حنوطه
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும் போது) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். -உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியாராவார்.- அவ்வாறே ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். உடனே உம்மு ஹராம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல்மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்” என்று கூறினார்கள். அப்போது, “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தமது தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என உம்மு ஹராம் கேட்க, முன்போலவே நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (கடல் பயணம்செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.63 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك رضى الله عنه انه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم اذا ذهب الى قباء يدخل على ام حرام بنت ملحان فتطعمه، وكانت تحت عبادة بن الصامت، فدخل يوما فاطعمته، فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ يضحك. قالت فقلت ما يضحكك يا رسول الله فقال " ناس من امتي عرضوا على غزاة في سبيل الله، يركبون ثبج هذا البحر، ملوكا على الاسرة ". او قال " مثل الملوك على الاسرة ". شك اسحاق قلت ادع الله ان يجعلني منهم. فدعا ثم وضع راسه فنام، ثم استيقظ يضحك فقلت ما يضحكك يا رسول الله قال " ناس من امتي عرضوا على، غزاة في سبيل الله، يركبون ثبج هذا البحر، ملوكا على الاسرة ". او " مثل الملوك على الاسرة ". فقلت ادع الله ان يجعلني منهم. قال " انت من الاولين ". فركبت البحر زمان معاوية، فصرعت عن دابتها حين خرجت من البحر، فهلكت

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வணிக முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள, அவருடைய உடலின் இரு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.) 2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு பிறவி உறுப்பு வெளியே தெரிய அமர்வது. 3. முலாமசா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.) 4. முனாபதா. (ஒருவர்மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.)64 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن الزهري، عن عطاء بن يزيد الليثي، عن ابي سعيد الخدري رضى الله عنه قال نهى النبي صلى الله عليه وسلم عن لبستين، وعن بيعتين اشتمال الصماء، والاحتباء في ثوب واحد، ليس على فرج الانسان منه شىء، والملامسة، والمنابذة. تابعه معمر ومحمد بن ابي حفصة وعبد الله بن بديل عن الزهري
இறைநம்பிக்கையாளர் களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் களான எங்களில் ஒருவர்கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது ‘வலப் பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்: முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதை ஓதிக்காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன். ஆகவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! ‘இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். (ஆகவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)66 அத்தியாயம் :
حدثنا موسى، عن ابي عوانة، حدثنا فراس، عن عامر، عن مسروق، حدثتني عايشة ام المومنين، قالت انا كنا ازواج النبي صلى الله عليه وسلم عنده جميعا، لم تغادر منا واحدة، فاقبلت فاطمة عليها السلام تمشي، لا والله ما تخفى مشيتها من مشية رسول الله صلى الله عليه وسلم فلما راها رحب قال " مرحبا بابنتي ". ثم اجلسها عن يمينه او عن شماله، ثم سارها فبكت بكاء شديدا، فلما راى حزنها سارها الثانية اذا هي تضحك. فقلت لها انا من بين نسايه خصك رسول الله صلى الله عليه وسلم بالسر من بيننا، ثم انت تبكين، فلما قام رسول الله صلى الله عليه وسلم سالتها عما سارك قالت ما كنت لافشي على رسول الله صلى الله عليه وسلم سره. فلما توفي قلت لها عزمت عليك بما لي عليك من الحق لما اخبرتني. قالت اما الان فنعم. فاخبرتني قالت اما حين سارني في الامر الاول، فانه اخبرني ان جبريل كان يعارضه بالقران كل سنة مرة " وانه قد عارضني به العام مرتين، ولا ارى الاجل الا قد اقترب، فاتقي الله واصبري، فاني نعم السلف انا لك ". قالت فبكيت بكايي الذي رايت، فلما راى جزعي سارني الثانية قال " يا فاطمة الا ترضين ان تكوني سيدة نساء المومنين او سيدة نساء هذه الامة