ஹதீஸ்கள்
#6278
ஸஹீஹ் அல்-புகாரீ - Asking Permission
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குள் சென்று இரண்டு ரகஅத்கள் தொழுதுவிட்டு, “இறைவா! எனக்கு ஒரு (நல்ல) நண்பரைத் தந்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தேன். பிறகு (நபித்தோழர்) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்துகொண்டேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், ‘கூஃபாவாசி’ என்று சொன்னேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (தொடர்ந்து) அவர்கள், “தன் தூதரின் நாவால் யாரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (நபி (ஸல்) அவர்களின் பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும் தலையணையையும் சுமந்து சென்றவர் உங்களிடையே இல்லையா?” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (அவற்றுக்கெல்லாம் நான் ‘ஆம்’ எனப் பதிலளித்தேன். பிறகு,) அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்-ரலி) அவர்கள் “வல்லய்லீ இதா யஃக்ஷா” எனும் (அல்லைல் அத்தியாயத்தின்) வசனங்களை எப்படி ஓதிக்கொண்டிருந்தார்கள்?” என்று கேட்டார்கள். “வத்தகரி வல்உன்ஸா” என்று (‘வ மா கலக்க’ எனும் சொற்றொடர் இல்லாமல்தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அப்போது அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட இந்த ஓதல்முறை விஷயத்தில் என்னைக் குழப்பப்பார்க்கிறார்கள்” என்று சென் னார்கள்.60 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن جعفر، حدثنا يزيد، عن شعبة، عن مغيرة، عن ابراهيم، عن علقمة، انه قدم الشام. وحدثنا ابو الوليد، حدثنا شعبة، عن مغيرة، عن ابراهيم، قال ذهب علقمة الى الشام، فاتى المسجد فصلى ركعتين فقال اللهم ارزقني جليسا. فقعد الى ابي الدرداء فقال ممن انت قال من اهل الكوفة. قال اليس فيكم صاحب السر الذي كان لا يعلمه غيره يعني حذيفة اليس فيكم او كان فيكم الذي اجاره الله على لسان رسوله صلى الله عليه وسلم من الشيطان يعني عمارا اوليس فيكم صاحب السواك والوساد يعني ابن مسعود كيف كان عبد الله يقرا {والليل اذا يغشى}. قال {والذكر والانثى}. فقال ما زال هولاء حتى كادوا يشككوني، وقد سمعتها من رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Asking Permission
- Hadith Index
- #6278
- Book Index
- 52
Grades
- -
