Loading...

Loading...
நூல்கள்
௪௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் (இறை வழியில்) உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يزيد، حدثنا سعيد هو ابن ابي ايوب قال حدثني ابو الاسود، عن عكرمة، عن عبد الله بن عمرو رضى الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " من قتل دون ماله فهو شهيد
அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அவர் (ஆயிஷா) அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி தட்டை உடைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), ‘‘உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும்வரை தட்டையும் அதைக் கொண்டுவந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்தி வைத்தார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக்கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து (அனுப்பி) விட்டார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن حميد، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان عند بعض نسايه، فارسلت احدى امهات المومنين مع خادم بقصعة فيها طعام فضربت بيدها، فكسرت القصعة، فضمها، وجعل فيها الطعام وقال " كلوا ". وحبس الرسول والقصعة حتى فرغوا، فدفع القصعة الصحيحة وحبس المكسورة. وقال ابن ابي مريم اخبرنا يحيى بن ايوب، حدثنا حميد، حدثنا انس، عن النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த யிஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் (தமது ஆசிரமத்தில்) தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்குப் பதிலளிக்க மறுத்துவிட்ட ஜுரைஜ், ‘‘நான் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டார். பிறகு (மீண்டும்) அவருடைய தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ‘‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக் கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரை ஜுக்கு) மரணத்தைத் தராதே” என்று கூறினார். (ஒருநாள்) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்கு வேன்” என்று சொல்லிக்கொண்டு, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள) அழைத்தாள். அவர் மறுத்துவிட்டார். ஆகவே, அவள் ஓர் இடையனிடம் சென்று, அவனுக்குத் தன்னைக் கொடுத் தாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, ‘‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்” என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து, அவரது ஆசிரமத்தை உடைத்து தகர்த்துவிட்டனர்; அவரை (அவரது அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் அங்கத் தூய்மை செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘‘(இன்ன) இடையன்” என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ‘‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித்தருகிறோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், ‘‘இல்லை; களிமண்ணால் கட்டித்தந்தாலே போதும்” என்று கூறினார். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا جرير بن حازم، عن محمد بن سيرين، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " كان رجل في بني اسراييل، يقال له جريج، يصلي، فجاءته امه فدعته، فابى ان يجيبها، فقال اجيبها او اصلي ثم اتته، فقالت اللهم لا تمته حتى تريه المومسات. وكان جريج في صومعته، فقالت امراة لافتنن جريجا. فتعرضت له فكلمته فابى، فاتت راعيا، فامكنته من نفسها فولدت غلاما، فقالت هو من جريج. فاتوه، وكسروا صومعته فانزلوه وسبوه، فتوضا وصلى ثم اتى الغلام، فقال من ابوك يا غلام قال الراعي. قالوا نبني صومعتك من ذهب. قال لا الا من طين