Loading...

Loading...
நூல்கள்
௪௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி லிருந்து தப்பி வரும்போது, சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாக்கப் பட்டுவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள் வார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن ابي المتوكل الناجي، عن ابي سعيد الخدري رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال " اذا خلص المومنون من النار حبسوا بقنطرة بين الجنة والنار، فيتقاصون مظالم كانت بينهم في الدنيا، حتى اذا نقوا وهذبوا اذن لهم بدخول الجنة، فوالذي نفس محمد صلى الله عليه وسلم بيده لاحدهم بمسكنه في الجنة ادل بمنزله كان في الدنيا ". وقال يونس بن محمد حدثنا شيبان عن قتادة حدثنا ابو المتوكل
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, ‘‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார் களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற் றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இறைநம்பிக்கை யாளரை தன் பக்கம் நெருங்கச்செய்து, அவர்மீது தன் திரையைப் போட்டு அவரை மறைத்துவிடுவான். பிறகு அவரை நோக்கி, ‘‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்பான். அதற்கு அவர், யிஆம், என் இறைவா!› என்று கூறுவார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவர் (தாம் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர் யிநாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தம்மைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், யிஇவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவரது நற்செயல்களின் பதிவேடு அவரிடம் கொடுக்கப்படும். இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘‘இவர்கள்தான், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். இதோ! இத்தகைய அக்கிரமக்காரர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும்” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، قال اخبرني قتادة، عن صفوان بن محرز المازني، قال بينما انا امشي، مع ابن عمر رضى الله عنهما اخذ بيده اذ عرض رجل، فقال كيف سمعت رسول الله صلى الله عليه وسلم في النجوى فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله يدني المومن فيضع عليه كنفه، ويستره فيقول اتعرف ذنب كذا اتعرف ذنب كذا فيقول نعم اى رب. حتى اذا قرره بذنوبه وراى في نفسه انه هلك قال سترتها عليك في الدنيا، وانا اغفرها لك اليوم. فيعطى كتاب حسناته، واما الكافر والمنافقون فيقول الاشهاد هولاء الذين كذبوا على ربهم، الا لعنة الله على الظالمين
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு அநீதி யிழைக்கவும்மாட்டார்; அவரை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும்மாட்டார். எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டி ருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கி றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கி றாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، ان سالما، اخبره ان عبد الله بن عمر رضى الله عنهما اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال " المسلم اخو المسلم، لا يظلمه ولا يسلمه، ومن كان في حاجة اخيه كان الله في حاجته، ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة، ومن ستر مسلما ستره الله يوم القيامة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் சகோதரன் அநீதியிழைத்தவனாக உள்ள நிலையிலும் அநீதியிழைக்கப் பட்டவனாக உள்ள நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا هشيم، اخبرنا عبيد الله بن ابي بكر بن انس، وحميد الطويل، سمعا انس بن مالك رضى الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم " انصر اخاك ظالما او مظلوما
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன் சகோதரன் அநீதி யிழைத்தவனாக உள்ள நிலையிலும் அநீதியிழைக்கப்பட்டவனாக உள்ள நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நாங்கள் உதவி செய்வோம் (அது சரிதான்). அநீதியிழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனுடைய கைகளைப் பிடித்து (அநீதியிழைக்க விடாமல் தடுத்து)க்கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا معتمر، عن حميد، عن انس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " انصر اخاك ظالما او مظلوما ". قالوا يا رسول الله هذا ننصره مظلوما، فكيف ننصره ظالما قال " تاخذ فوق يديه
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். (கட்டளையிடப்பட்ட) அவையாவன: 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’) என்று சொன்னால், யியர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பதிலளிப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.2 அத்தியாயம் :
حدثنا سعيد بن الربيع، حدثنا شعبة، عن الاشعث بن سليم، قال سمعت معاوية بن سويد، سمعت البراء بن عازب رضى الله عنهما قال امرنا النبي صلى الله عليه وسلم بسبع، ونهانا عن سبع. فذكر عيادة المريض، واتباع الجنايز، وتشميت العاطس، ورد السلام، ونصر المظلوم، واجابة الداعي، وابرار المقسم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது. (இப்படிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றோ டொன்று கோத்துக்காட்டினார்கள். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " المومن للمومن كالبنيان يشد بعضه بعضا ". وشبك بين اصابعه
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.3 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا عبد العزيز الماجشون، اخبرنا عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " الظلم ظلمات يوم القيامة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது ‘‘அநீதி யிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங் கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن موسى، حدثنا وكيع، حدثنا زكرياء بن اسحاق المكي، عن يحيى بن عبد الله بن صيفي، عن ابي معبد، مولى ابن عباس عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن، فقال " اتق دعوة المظلوم، فانها ليس بينها وبين الله حجاب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தம் சகோதரனுக்கு, அவனது மானம் தொடர்பாகவோ வேறு பொருள் தொடர்பாகவோ இழைத்த அநீதிக்கு இன்றே லிபொற்காசோ வெள்ளிக்காசோ இல்லாத நாள் வருவதற்கு முன்பேலி (மன்னிப்புப் பெற்று) விமோசனம் காணட்டும்!4 (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவர் இழைத்த அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு)விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களுக்கு ‘அல்மக்புரீ’ (கப்றைச் சார்ந்தவர்) எனப் பெயர் வரக் காரணம், அவர் கப்றுகளுக்கு (அடக்கத் தலங்களுக்கு) அருகிலேயே தங்குவார். அவர் யிபனூ லைஸ்’ குலத்தாரின் முன்னாள் அடிமை ஆவார். இவருடைய தந்தை அபூசயீதின் இயற்பெயர் யிகைசான்’ என்பதாகும். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا ابن ابي ذيب، حدثنا سعيد المقبري، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من كانت له مظلمة لاحد من عرضه او شىء فليتحلله منه اليوم، قبل ان لا يكون دينار ولا درهم، ان كان له عمل صالح اخذ منه بقدر مظلمته، وان لم تكن له حسنات اخذ من سييات صاحبه فحمل عليه ". قال ابو عبد الله قال اسماعيل بن ابي اويس انما سمي المقبري لانه كان نزل ناحية المقابر. قال ابو عبد الله وسعيد المقبري هو مولى بني ليث، وهو سعيد بن ابي سعيد، واسم ابي سعيد كيسان
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை” (4:128) என்ற குர்ஆனின் வசனத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு மனிதர் தம் மனைவியிடம் அதிக நாட்டம் கொள்ளாமல் அவளைவிட்டுப் பிரிந்துவிட விரும்புகிறார். இந்நிலையில் மனைவி, ‘‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான் விட்டுக்கொடுத்து) நடந்துகொள்கிறேன் (என்னை மணவிலக் குச் செய்துவிட வேண்டாம்)” என்று கேட்டுக்கொள்கிறாள். இது தொடர்பாகவே இந்த இறைவசனம் அருளப்பட்டது. அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبد الله، اخبرنا هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها – {وان امراة خافت من بعلها نشوزا او اعراضا} قالت الرجل تكون عنده المراة، ليس بمستكثر منها، يريد ان يفارقها، فتقول اجعلك من شاني في حل. فنزلت هذه الاية في ذلك
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்த வர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள். அந்தச் சிறுவர், ‘‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்தப் பானத்தை வைத்தார்கள்.5 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي حازم بن دينار، عن سهل بن سعد الساعدي رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اتي بشراب، فشرب منه وعن يمينه غلام وعن يساره الاشياخ، فقال للغلام " اتاذن لي ان اعطي هولاء ". فقال الغلام لا والله يا رسول الله لا اوثر بنصيبي منك احدا. قال فتله رسول الله صلى الله عليه وسلم في يده
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாகக் கைப்பற்றுகிறாரோ, அவரது கழுத்தில் (மறுமை நாளில்) அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني طلحة بن عبد الله، ان عبد الرحمن بن عمرو بن سهل، اخبره ان سعيد بن زيد رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من ظلم من الارض شييا طوقه من سبع ارضين
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கும் வேறு சிலருக்கும் இடையே (ஒரு நிலம் சம்பந்தமாகத்) தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அப்போது என்னிடம் அவர்கள் சொன்னார்கள்: அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக்கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا حسين، عن يحيى بن ابي كثير، قال حدثني محمد بن ابراهيم، ان ابا سلمة، حدثه انه، كانت بينه وبين اناس خصومة، فذكر لعايشة رضى الله عنها فقالت يا ابا سلمة اجتنب الارض، فان النبي صلى الله عليه وسلم قال " من ظلم قيد شبر من الارض طوقه من سبع ارضين
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் (அடுத்தவரின்) ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தமக்கு உரிமையின்றி எடுத்துக்கொண்டாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அமிழ்த் தப்படுவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் குராசானில் தொகுத்த நூலில் இந்த ஹதீஸ் இடம்பெறவில்லை. மாறாக, (இராக்கிலுள்ள) யிபஸ்ரா’வில்தான் இந்த ஹதீஸை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.6 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا عبد الله بن المبارك، حدثنا موسى بن عقبة، عن سالم، عن ابيه رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " من اخذ من الارض شييا بغير حقه خسف به يوم القيامة الى سبع ارضين ". قال ابو عبد الله هذا الحديث ليس بخراسان في كتاب ابن المبارك، املاه عليهم بالبصرة
ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்துவந்தார் கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரே தடவையில் எடுத்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தம் சகோதரரிடம் அனுமதி கேட்டுக்கொண்டால் தவிர” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن جبلة، كنا بالمدينة في بعض اهل العراق، فاصابنا سنة، فكان ابن الزبير يرزقنا التمر، فكان ابن عمر رضى الله عنهما يمر بنا فيقول ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الاقران، الا ان يستاذن الرجل منكم اخاه
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அபூஷுஐப்’ எனப்படும் அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சி விற்கும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று கூறினார். அவர் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியைக் கண்டார். ஆகவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்; நபி (ஸல்) அவர்களுடன் வந்தவர்களோடு விருந்துக்கு அழைக்கப் படாத ஒரு மனிதரும் சேர்ந்துகொண்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அபூஷுஐப் (ரலி) அவர்களிடம்), ‘‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)” என்று பதில் கூறினார். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، عن ابي مسعود، ان رجلا، من الانصار يقال له ابو شعيب كان له غلام لحام فقال له ابو شعيب اصنع لي طعام خمسة لعلي ادعو النبي صلى الله عليه وسلم خامس خمسة. وابصر في وجه النبي صلى الله عليه وسلم الجوع فدعاه، فتبعهم رجل لم يدع فقال النبي صلى الله عليه وسلم " ان هذا قد اتبعنا اتاذن له ". قال نعم
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக விதண்டாவாதம் புரிபவன்தான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن ابن ابي مليكة، عن عايشة رضى الله عنها عن النبي صلى الله عليه وسلم قال " ان ابغض الرجال الى الله الالد الخصم
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக்கொண்டிருந்ததைச் செவியுற் றார்கள். உடனே அவர்களிடம் சென்று, ‘‘நான் ஒரு மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன். அப்படி ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று (உண்மை தெரியாமல்) நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிவிட வேண்டாம். அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவர் (விரும்பினால்) அதை எடுத்துக்கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக்கொள்ளாமல்) விட்டு விடட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، ان زينب بنت ام سلمة، اخبرته ان امها ام سلمة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم اخبرتها عن رسول الله صلى الله عليه وسلم انه سمع خصومة بباب حجرته، فخرج اليهم، فقال " انما انا بشر وانه ياتيني الخصم، فلعل بعضكم ان يكون ابلغ من بعض، فاحسب انه صدق، فاقضي له بذلك، فمن قضيت له بحق مسلم فانما هي قطعة من النار، فلياخذها او فليتركها
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் யாரிடம் உள்ளனவோ அவர் நயவஞ்சகர் ஆவார். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவரிடம் குடிகொண்டிருந்தாலும் அவர் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் குடியிருக்கும். (அந்த நான்கு குணங்களாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்க ளித்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் நேர்மை தவறி நடந்துகொள்வான் (அவமதிப்பான்). இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن خالد، اخبرنا محمد، عن شعبة، عن سليمان، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله بن عمرو رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " اربع من كن فيه كان منافقا، او كانت فيه خصلة من اربعة كانت فيه خصلة من النفاق، حتى يدعها اذا حدث كذب، واذا وعد اخلف، واذا عاهد غدر، واذا خاصم فجر