Loading...

Loading...
நூல்கள்
௯ ஹதீஸ்கள்
ஹம்ஸா பின் அம்ர் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலகராக அனுப்பினார்கள். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபசாரம் செய்து விட்டார். உடனே நான் அந்த மனிதருக் காகச் சில பிணையாட்களைப் பிடித்து வைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். பிணையாட்கள் கூறியதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவருக்கு (குற்றவாளிக்கு) உமர் (ரலி) அவர்கள் அதற்கு முன்பே நூறு சாட்டையடி வழங்கியிருந்தார்கள். (மனைவியின் அடிமைப் பெண்ணை கணவன் உடலுறவு கொள்ளலாகாது என்ற சட்டத்தை) அறியாமல் அவர் குற்றம் செய்த காரணத்தை ஏற்று, (கல்லெறியும் தண்டனை வழங்காமல்) அவரை விட்டுவிட்டார்கள்.3 (முசைலிமா என்பவனை இறைத்தூதராக ஏற்று) இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) ஆகிய இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ‘‘இஸ்லாத்தை விட்டுச் சென்றவர் களை பாவமன்னிப்புக் கோரச் சொல்லுங் கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அவ்வாறே அவர்கள், பாவமன்னிப்புக் கோரினர். அவர்களின் உறவினர்கள் அவர்களுக்குப் பிணையேற்றனர். ‘‘ஓர் ஆளுக்குப் பிணையேற்ற ஒருவர் இறந்துவிட்டால், அவர்மீது பொறுப்பில்லை (அவருடைய வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது)” என்று ஹம்மாத் பின் அபீ சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். பிணையேற்றவர் இறந்துவிட்டாலும் அவரது பொறுப்பு நீங்காது என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
وقال ابو الزناد عن محمد بن حمزة بن عمرو الاسلمي، عن ابيه، ان عمر رضى الله عنه بعثه مصدقا، فوقع رجل على جارية امراته، فاخذ حمزة من الرجل كفيلا حتى قدم على عمر، وكان عمر قد جلده ماية جلدة، فصدقهم، وعذره بالجهالة. وقال جرير والاشعث لعبد الله بن مسعود في المرتدين استتبهم، وكفلهم. فتابوا وكفلهم عشايرهم. وقال حماد اذا تكفل بنفس فمات فلا شىء عليه. وقال الحكم يضمن
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ‘‘சாட்சிகளை என்னிடம் கொண்டுவா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்”என்றார். கடன் கேட்டவர், யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்றார். ‘‘அப்படியானால் பிணையேற்கும் ஒருவரை என்னிடம் கொண்டுவா” என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்கு கடன் கேட்டவர், யிபிணையேற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர், ‘நீர் கூறுவதும் உண்மைதான்’ என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்க வில்லை. உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் என்னிடம் பிணையேற்பவர் வேண்டும் என்றார்; நான் ‘அல்லாஹ்வே பிணையேற்கப் போதுமானவன்’ என்றேன்; அவர் உன்னை(ப் பிணையாளியாக) ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; யிசாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினேன்; அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக்கொண்டார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பிவிடு வதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதை யெல்லாம் நீ அறிவாய். எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்” என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றது. பிறகு அவர் திரும்பிவிட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக்கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்டவாறு புறப்பட்டார். அப்போது, பணம் உள்ள அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, (ஒரு நாள்) கடன் வாங்கியவர் ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன்; சற்று முன்புதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், ‘‘எனக்கு எதையேனும் அனுப்பிவைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர், ‘‘வாகனம் கிடைக்காமல் சற்று முன்புதான் வந்திருக்கி றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!” என்று கூறினார். கடன் கொடுத்தவர், ‘‘நீர் மரக் கட்டையில் வைத்து அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்துவிட்டான்; எனவே, இந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக்கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!” என்று கூறினார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
قال ابو عبد الله وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، عن ابي هريرة رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم " انه ذكر رجلا من بني اسراييل سال بعض بني اسراييل ان يسلفه الف دينار، فقال ايتني بالشهداء اشهدهم. فقال كفى بالله شهيدا. قال فاتني بالكفيل. قال كفى بالله كفيلا. قال صدقت. فدفعها اليه الى اجل مسمى، فخرج في البحر، فقضى حاجته، ثم التمس مركبا يركبها، يقدم عليه للاجل الذي اجله، فلم يجد مركبا، فاخذ خشبة، فنقرها فادخل فيها الف دينار، وصحيفة منه الى صاحبه، ثم زجج موضعها، ثم اتى بها الى البحر، فقال اللهم انك تعلم اني كنت تسلفت فلانا الف دينار، فسالني كفيلا، فقلت كفى بالله كفيلا، فرضي بك، وسالني شهيدا، فقلت كفى بالله شهيدا، فرضي بك، واني جهدت ان اجد مركبا، ابعث اليه الذي له فلم اقدر، واني استودعكها. فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يلتمس مركبا، يخرج الى بلده، فخرج الرجل الذي كان اسلفه، ينظر لعل مركبا قد جاء بماله، فاذا بالخشبة التي فيها المال، فاخذها لاهله حطبا، فلما نشرها وجد المال والصحيفة، ثم قدم الذي كان اسلفه، فاتى بالالف دينار، فقال والله ما زلت جاهدا في طلب مركب لاتيك بمالك، فما وجدت مركبا قبل الذي اتيت فيه. قال هل كنت بعثت الى بشىء قال اخبرك اني لم اجد مركبا قبل الذي جيت فيه. قال فان الله قد ادى عنك الذي بعثت في الخشبة فانصرف بالالف الدينار راشدا
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு, அவருடைய இரத்த உறவினர்கள் அன்றி முஹாஜிர் (நண்பரே) வாரிசாகிவந்தார். முஹாஜிர்லிஅன்சாரிக்கிடையே நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய (இஸ்லாமிய) சகோதரத்துவமே இதற்குக் காரணம். பிறகு ‘‘பெற்றோரும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)துக்கு (உரிய) வாரிசுகளை ஒவ்வொருவருக்கும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் வலக் கரங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனவோ அவர்களுக்கு, அவர் களின் பங்கை அளித்துவிடுங்கள்” (4:33) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்துகொண்டவர் களுக்கிடையே வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்கல், அறிவுரை கூறல் ஆகியவைதான் எஞ்சியுள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக மரண சாசனம் (வேண்டுமானால்) செய்யலாம். அத்தியாயம் :
حدثنا الصلت بن محمد، حدثنا ابو اسامة، عن ادريس، عن طلحة بن مصرف، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما – {ولكل جعلنا موالي} قال ورثة {والذين عقدت ايمانكم} قال كان المهاجرون لما قدموا المدينة يرث المهاجر الانصاري دون ذوي رحمه للاخوة التي اخى النبي صلى الله عليه وسلم بينهم، فلما نزلت {ولكل جعلنا موالي} نسخت، ثم قال {والذين عقدت ايمانكم } الا النصر والرفادة والنصيحة، وقد ذهب الميراث ويوصي له
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (புலம்பெயர்ந்து மக்காவிலிருந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தபோது, அவருக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள்.4 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس رضى الله عنه قال قدم علينا عبد الرحمن بن عوف فاخى رسول الله صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع
ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களி டம், ‘‘இஸ்லாத்தில் (மனிதர்களாக எற்படுத்திக்கொள்கிற வாரிசாகிக்கொள்ளும் ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி உங்களுக்குச் கிடைத்ததா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘எனது வீட்டில்வைத்து முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் நட்புறவு முறையை ஏற்படுத்தி னார்களே!” என்று பதிலளித்தார்கள்.5 அத்தியாயம் :
حدثنا محمد بن الصباح، حدثنا اسماعيل بن زكرياء، حدثنا عاصم، قال قلت لانس رضى الله عنه ابلغك ان النبي صلى الله عليه وسلم قال " لا حلف في الاسلام ". فقال قد حالف النبي صلى الله عليه وسلم بين قريش والانصار في داري
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித்தொழுகை நடத்துவதற்காக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு வரப்பட்டது. ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யிஇல்லை’ என்ற னர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது ‘‘இவருக்குக் கடன் உண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் யிஆம்!› என்றனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்!” என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி னார்கள்.6 அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم اتي بجنازة، ليصلي عليها، فقال " هل عليه من دين ". قالوا لا. فصلى عليه، ثم اتي بجنازة اخرى، فقال " هل عليه من دين ". قالوا نعم. قال " صلوا على صاحبكم ". قال ابو قتادة على دينه يا رسول الله. فصلى عليه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார் கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைன் நிதி வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைன் நிதி வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால், அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நான் அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறியிருந்தார்கள்” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு இரு கை நிறைய (நாணயங்களை) ஒரு தடவை அள்ளிக்கொடுத்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன. ‘‘இதைப் போன்று இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا عمرو، سمع محمد بن علي، عن جابر بن عبد الله رضى الله عنهم قال قال النبي صلى الله عليه وسلم " لو قد جاء مال البحرين، قد اعطيتك هكذا وهكذا وهكذا ". فلم يجي مال البحرين حتى قبض النبي صلى الله عليه وسلم فلما جاء مال البحرين امر ابو بكر فنادى من كان له عند النبي صلى الله عليه وسلم عدة او دين فلياتنا. فاتيته، فقلت ان النبي صلى الله عليه وسلم قال لي كذا وكذا، فحثى لي حثية فعددتها فاذا هي خمسماية، وقال خذ مثليها
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் (அபூபக்ர், உம்மு ரூமான்) (இஸ்லாம்) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பகலின் இரு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. (மக்காவில்) முஸ்லிம்கள் (இணைவைப்பாளர்களால்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயர்ந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். யிபர்குல் ஃகிமாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் ‘அல்காரா’ எனும் குலத்தின் தலைவராவார். அவர் அவர்களிடம், ‘‘அபூபக்ரே! எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் சமுதாயத்தார் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வழிபடப்போகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு இப்னு தஃகினா, ‘‘உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவைப் பேணுகிறீர்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்; விருந்தினர் களை உபசரிக்கிறீர்; சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே, திரும்பிச் சென்று உமது ஊரிலேயே உம்முடைய இறையை வழிபடுவீராக!” எனக் கூறினார். இப்னு தஃகினா, தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு குறைஷி இறைமறுப்பாளர்களின் பிரமுகர் களைச் சந்தித்தார். அவர்களிடம், ‘‘அபூபக் ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவைப் பேணுகின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்ற, சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவுகின்ற ஒரு மனிதரையா நீங்கள் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்டார். ஆகவே, குறைஷியர் இப்னு தஃகினா அளித்த அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்த னர். ஆனால், இப்னு தஃகினாவிடம், ‘‘தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும்படியும் அபூபக்ருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர். இதை இப்னு தஃகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது வீட்டுக்குள்ளேயே தம் இறையை வழிபடலானார்கள்; தமது தொழுகை, ஓதுதல் ஆகியவற்றை வீட்டுக்கு வெளியே பகிரங்கப் படுத்தவில்லை. பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ தோன்ற, தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி, வெளிப் படையாக அந்த இடத்தில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக்கொண்டும் இருக்கலானார்கள். இணைவைப்பாளர் களின் மனைவி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அபூபக்ரைக் கவனிக்க லாயினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவ ராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. உடனே இப்னு தஃகினாவை அழைத்து வரச் செய்தார்கள். அவர்களிடம் அவர் வந்தார். அவரிடம், ‘‘அபூபக்ர் அவர்கள், தமது வீட்டில்தான் தம் இறையை வழிபடவேண்டும் என்ற அடிப்படை யிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்திருந்தோம். அவர் அதை மீறித் தமது வீட்டின் முற்றத்தில் தொழுமிடத்தை உருவாக்கி, பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தமது வீட்டில் மட்டும் வழிபடுவதாக இருந்தால் செய்யட்டும்; அதை அவர் மறுத்து, பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறினால், நீர் கொடுத்த அடைக்கலத்தைத் திரும்பத் தருமாறு அவரிடம் கோரும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்தத்தை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்ர் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் (தயாராக) இல்லை” என்று குறைஷியர் கூறினர். உடனே இப்னு தஃகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘எந்த அடிப்படையில் உம்மிடம் நான் ஒப்பந்தம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். எனவே, நீர் அதன்படி மட்டுமே நடக்க வேண்டும். இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். ஒரு மனிதரிடம் இப்னு தஃகினா செய்த உடன்படிக்கை முறிக்கப்பட்டது என்று (பிற்காலத்தில்) அரபியர் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘உமது அடைக்கலத்தை உம்மிடமே நான் திரும்பத் தந்துவிடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்புதியுறுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். ‘‘நீங்கள் புலம்பெயர்ந்து செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது இரு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த உவர் நிலமாகும். அந்த இருமலைகள்தான் (மதீனாவின்) இரு கருங்கல் பூமிகளாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் சென்றார்கள். அபிசீனியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயரத் தயாரானபோது, அவர்களிடம், ‘‘சற்றுப் பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படுவதை நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அனுமதியைத்தான் எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது பயணத்தை நிறுத்திவைத்தார்கள். தம்மிடமிருந்த இரண்டு ஊர்தி ஒட்டகங்களுக்கும் கருவேல மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டு (வளர்த்து)வந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்ட நிலையில் இறந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறுதித் தொழுகைக்காகக்) கொண்டுவரப் படுவார்; அப்போது ‘‘இவர் தம்மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்பார்கள். ‘‘கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச்சென்றிருக்கிறார்” என்று கூறப் பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்து வார்கள். இல்லையென்றால், ‘‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது (அதன் மூலம் அரசு நிதி குவிந்ததால்), ‘‘இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களைவிட நானே நெருக்கமான (உரிமை உடைய)வன் ஆவேன். எனவே, இறைநம்பிக்கையாளர்களில் யார் கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கிறாரோ அதை அடைப்பது என் பொறுப்பாகும்; யார் செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவர்களின் வாரிசுகளுக்கு உரியதாகும்!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يوتى بالرجل المتوفى عليه الدين فيسال " هل ترك لدينه فضلا ". فان حدث انه ترك لدينه وفاء صلى، والا قال للمسلمين " صلوا على صاحبكم ". فلما فتح الله عليه الفتوح قال " انا اولى بالمومنين من انفسهم، فمن توفي من المومنين فترك دينا فعلى قضاوه، ومن ترك مالا فلورثته
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، قال ابن شهاب فاخبرني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت لم اعقل ابوى الا وهما يدينان الدين. وقال ابو صالح حدثني عبد الله عن يونس عن الزهري قال اخبرني عروة بن الزبير ان عايشة رضى الله عنها قالت لم اعقل ابوى قط، الا وهما يدينان الدين، ولم يمر علينا يوم الا ياتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفى النهار بكرة وعشية، فلما ابتلي المسلمون خرج ابو بكر مهاجرا قبل الحبشة، حتى اذا بلغ برك الغماد لقيه ابن الدغنة وهو سيد القارة فقال اين تريد يا ابا بكر فقال ابو بكر اخرجني قومي فانا اريد ان اسيح في الارض فاعبد ربي. قال ابن الدغنة ان مثلك لا يخرج ولا يخرج، فانك تكسب المعدوم، وتصل الرحم، وتحمل الكل، وتقري الضيف، وتعين على نوايب الحق، وانا لك جار فارجع فاعبد ربك ببلادك. فارتحل ابن الدغنة، فرجع مع ابي بكر، فطاف في اشراف كفار قريش، فقال لهم ان ابا بكر لا يخرج مثله، ولا يخرج، اتخرجون رجلا يكسب المعدوم، ويصل الرحم، ويحمل الكل، ويقري الضيف، ويعين على نوايب الحق. فانفذت قريش جوار ابن الدغنة وامنوا ابا بكر وقالوا لابن الدغنة مر ابا بكر فليعبد ربه في داره، فليصل وليقرا ما شاء، ولا يوذينا بذلك، ولا يستعلن به، فانا قد خشينا ان يفتن ابناءنا ونساءنا. قال ذلك ابن الدغنة لابي بكر، فطفق ابو بكر يعبد ربه في داره، ولا يستعلن بالصلاة ولا القراءة في غير داره، ثم بدا لابي بكر فابتنى مسجدا بفناء داره، وبرز فكان يصلي فيه، ويقرا القران، فيتقصف عليه نساء المشركين وابناوهم، يعجبون وينظرون اليه، وكان ابو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرا القران، فافزع ذلك اشراف قريش من المشركين، فارسلوا الى ابن الدغنة فقدم عليهم، فقالوا له انا كنا اجرنا ابا بكر على ان يعبد ربه في داره، وانه جاوز ذلك، فابتنى مسجدا بفناء داره، واعلن الصلاة والقراءة، وقد خشينا ان يفتن ابناءنا ونساءنا، فاته فان احب ان يقتصر على ان يعبد ربه في داره فعل، وان ابى الا ان يعلن ذلك فسله ان يرد اليك ذمتك، فانا كرهنا ان نخفرك، ولسنا مقرين لابي بكر الاستعلان. قالت عايشة فاتى ابن الدغنة ابا بكر، فقال قد علمت الذي عقدت لك عليه، فاما ان تقتصر على ذلك واما ان ترد الى ذمتي، فاني لا احب ان تسمع العرب اني اخفرت في رجل عقدت له. قال ابو بكر اني ارد اليك جوارك، وارضى بجوار الله. ورسول الله صلى الله عليه وسلم يوميذ بمكة، فقال رسول الله صلى الله عليه وسلم " قد اريت دار هجرتكم، رايت سبخة ذات نخل بين لابتين ". وهما الحرتان، فهاجر من هاجر قبل المدينة حين ذكر ذلك رسول الله صلى الله عليه وسلم، ورجع الى المدينة بعض من كان هاجر الى ارض الحبشة، وتجهز ابو بكر مهاجرا، فقال له رسول الله صلى الله عليه وسلم " على رسلك فاني ارجو ان يوذن لي ". قال ابو بكر هل ترجو ذلك بابي انت قال " نعم ". فحبس ابو بكر نفسه على رسول الله صلى الله عليه وسلم ليصحبه وعلف راحلتين كانتا عنده ورق السمر اربعة اشهر