ஹதீஸ்கள்
#2290
ஸஹீஹ் அல்-புகாரீ - Guarantee
ஹம்ஸா பின் அம்ர் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலகராக அனுப்பினார்கள். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபசாரம் செய்து விட்டார். உடனே நான் அந்த மனிதருக் காகச் சில பிணையாட்களைப் பிடித்து வைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். பிணையாட்கள் கூறியதை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவருக்கு (குற்றவாளிக்கு) உமர் (ரலி) அவர்கள் அதற்கு முன்பே நூறு சாட்டையடி வழங்கியிருந்தார்கள். (மனைவியின் அடிமைப் பெண்ணை கணவன் உடலுறவு கொள்ளலாகாது என்ற சட்டத்தை) அறியாமல் அவர் குற்றம் செய்த காரணத்தை ஏற்று, (கல்லெறியும் தண்டனை வழங்காமல்) அவரை விட்டுவிட்டார்கள்.3 (முசைலிமா என்பவனை இறைத்தூதராக ஏற்று) இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) ஆகிய இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ‘‘இஸ்லாத்தை விட்டுச் சென்றவர் களை பாவமன்னிப்புக் கோரச் சொல்லுங் கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அவ்வாறே அவர்கள், பாவமன்னிப்புக் கோரினர். அவர்களின் உறவினர்கள் அவர்களுக்குப் பிணையேற்றனர். ‘‘ஓர் ஆளுக்குப் பிணையேற்ற ஒருவர் இறந்துவிட்டால், அவர்மீது பொறுப்பில்லை (அவருடைய வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது)” என்று ஹம்மாத் பின் அபீ சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். பிணையேற்றவர் இறந்துவிட்டாலும் அவரது பொறுப்பு நீங்காது என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
وقال ابو الزناد عن محمد بن حمزة بن عمرو الاسلمي، عن ابيه، ان عمر رضى الله عنه بعثه مصدقا، فوقع رجل على جارية امراته، فاخذ حمزة من الرجل كفيلا حتى قدم على عمر، وكان عمر قد جلده ماية جلدة، فصدقهم، وعذره بالجهالة. وقال جرير والاشعث لعبد الله بن مسعود في المرتدين استتبهم، وكفلهم. فتابوا وكفلهم عشايرهم. وقال حماد اذا تكفل بنفس فمات فلا شىء عليه. وقال الحكم يضمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Guarantee
- Hadith Index
- #2290
- Book Index
- 1
Grades
- -
