Loading...

Loading...
நூல்கள்
௬ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடு கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني ابو سلمة، ان ابا هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان " من قامه ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழி படுகிறாரோ அவர் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதே நிலையில்தான் (மக்கள் தனியாக தராவீஹை நிறைவேற்றிவந்த நிலையில் தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ". قال ابن شهاب فتوفي رسول الله صلى الله عليه وسلم والامر على ذلك، ثم كان الامر على ذلك في خلافة ابي بكر وصدرا من خلافة عمر رضى الله عنهما
அப்துர் ரஹ்மான் பின் அப்து அல்காரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். சிலர் தனியாகத் தொழுதுகொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுதுகொண்டி ருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே எனக் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, அதில் உறுதியான முடிவெடுத் தார்கள். பிறகு மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்கள் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வழிபடுவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வழிபடுவது சிறந்ததாகும்” என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுகொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3 அத்தியாயம் :
وعن ابن شهاب، عن عروة بن الزبير، عن عبد الرحمن بن عبد القاري، انه قال خرجت مع عمر بن الخطاب رضى الله عنه ليلة في رمضان، الى المسجد، فاذا الناس اوزاع متفرقون يصلي الرجل لنفسه، ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر اني ارى لو جمعت هولاء على قاري واحد لكان امثل. ثم عزم فجمعهم على ابى بن كعب، ثم خرجت معه ليلة اخرى، والناس يصلون بصلاة قاريهم، قال عمر نعم البدعة هذه، والتي ينامون عنها افضل من التي يقومون. يريد اخر الليل، وكان الناس يقومون اوله
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவில்) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة، رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم ان رسول الله صلى الله عليه وسلم صلى وذلك في رمضان
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒருநாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக்கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ, அவர்களுடன மக்களும் தொழுதனர். காலையில் (இது குறித்து) மக்கள் பேசிக்கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ‘‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள்மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இதே நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، اخبرني عروة، ان عايشة رضى الله عنها اخبرته ان رسول الله صلى الله عليه وسلم خرج ليلة من جوف الليل، فصلى في المسجد، وصلى رجال بصلاته، فاصبح الناس فتحدثوا، فاجتمع اكثر منهم، فصلوا معه، فاصبح الناس فتحدثوا، فكثر اهل المسجد من الليلة الثالثة، فخرج رسول الله صلى الله عليه وسلم فصلى، فصلوا بصلاته، فلما كانت الليلة الرابعة عجز المسجد عن اهله، حتى خرج لصلاة الصبح، فلما قضى الفجر اقبل على الناس، فتشهد ثم قال " اما بعد، فانه لم يخف على مكانكم، ولكني خشيت ان تفترض عليكم فتعجزوا عنها ". فتوفي رسول الله صلى الله عليه وسلم والامر على ذلك
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொன்று ரக்அத்களைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழவில்லை; (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் (வித்ர்) தொழுவார்கள்” என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வித்ர் தொழுவதற்குமுன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷா! என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்காது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن سعيد المقبري، عن ابي سلمة بن عبد الرحمن، انه سال عايشة رضى الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان يزيد في رمضان، ولا في غيرها على احدى عشرة ركعة، يصلي اربعا فلا تسل عن حسنهن وطولهن، ثم يصلي اربعا فلا تسل عن حسنهن وطولهن، ثم يصلي ثلاثا. فقلت يا رسول الله، اتنام قبل ان توتر قال " يا عايشة ان عينى تنامان ولا ينام قلبي