ஹதீஸ்கள்
#2012
ஸஹீஹ் அல்-புகாரீ - Praying at Night in Ramadaan (Taraweeh)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானில் ஒருநாள்) நள்ளிரவில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்கள் சிலரும் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றிப்) பேசிக்கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ, அவர்களுடன மக்களும் தொழுதனர். காலையில் (இது குறித்து) மக்கள் பேசிக்கொண்டனர். மூன்றாம் இரவு பள்ளிவாசலில் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, ‘‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள்மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இதே நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Praying at Night in Ramadaan (Taraweeh)
- Hadith Index
- #2012
- Book Index
- 5
Grades
- -