Loading...
Loading...
நூல்கள்
118 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு சிறுதுண்டின் மூலமாவது நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி தன்னுடைய இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அத...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார். “நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர், “நான் தர்மம் செய்யப்போகிறேன்” எனக் கூறிக்கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றி...
மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திர...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது (அரியணை) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்; நீதி வழுவா ஆட்சியாளர். இறைவழிபாட்டிலேயே வளர்ந்த...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தர்மம் செய்துகொள் ளுங்கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவர் தமது தர்மப் பொருளை (வலக் கரத்தில்) எடுத்துக்கொண்டு அலைவார். அப்போது ஒரு மனிதன், நேற்றே இதை நீர்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் (முறையோடு) தர்மம் செய்தால், அவள் செலவழித்தற்காக அவளுக்கும் (தர்மத்தின்) பலன் கிடைக்கும். அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் அவளுடைய க...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உம்முடைய குடும்பத்தாரிட மிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்தத...
உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு, உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்க...
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால், அல்லது அவர்களிடம் ஏதேனும் தேவை(யை நிறைவேற்றுமாறு) கோரப் பட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துர...
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) பையை முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” எ...
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (...
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்தி ருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (...
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், தர்மம் செய்தல், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணல் போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில் எனக்கு) நன்மை...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதற்கான பலன் அவளுக்கு உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது...