Loading...

Loading...
நூல்கள்
௬௮ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: அல்லாஹும்ம! ல(க்)கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீ ஹின்ன. வல(க்)கல் ஹம்து. ல(க்)க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த மலிக்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வல(க்)கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅது(க்)கல் ஹக்கு. வ லிகாஉக்க ஹக்குன். வ கவ்லு(க்)க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந்நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்) ஹக்குன். வஸ்ஸா அத்து ஹக்குன். அல்லாஹும்ம! ல(க்)க அஸ்லம்த்து, வ பி(க்)க ஆமன்த்து, வ அலை(க்)க தவக் கல்த்து, வ இலை(க்)க அனப்த்து, வ பி(க்)க காஸம்த்து, வ இலை(க்)க ஹாகம்த்து. ஃபக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த; அல்லது லா இலாஹ ஃகைருக்க. (பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஆட்சி யும் உனக்கே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது சந்திப்பு உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை. மறுமை உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடு வேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஉமய்யா அப்துல் கரீம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘வ லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை) என்று கூறுவார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال حدثنا سليمان بن ابي مسلم، عن طاوس، سمع ابن عباس رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم اذا قام من الليل يتهجد قال " اللهم لك الحمد انت قيم السموات والارض ومن فيهن ولك الحمد، لك ملك السموات والارض ومن فيهن، ولك الحمد انت نور السموات والارض، ولك الحمد انت الحق، ووعدك الحق، ولقاوك حق، وقولك حق، والجنة حق، والنار حق، والنبيون حق، ومحمد صلى الله عليه وسلم حق، والساعة حق، اللهم لك اسلمت، وبك امنت وعليك توكلت، واليك انبت، وبك خاصمت، واليك حاكمت، فاغفر لي ما قدمت وما اخرت، وما اسررت وما اعلنت، انت المقدم وانت الموخر، لا اله الا انت او لا اله غيرك ". قال سفيان وزاد عبد الكريم ابو امية " ولا حول ولا قوة الا بالله ". قال سفيان قال سليمان بن ابي مسلم سمعه من طاوس عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத் துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட் டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளி வாசலில் உறங்கக்கூடியவனாக இருந் தேன். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்: இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச்சுவர் இருப்பதைப் போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்” என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடையமாட்டீர்” என்று கூறினார். இதை நான் (என் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள். (இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا هشام، قال اخبرنا معمر،. وحدثني محمود، قال حدثنا عبد الرزاق، قال اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابيه رضى الله عنه قال كان الرجل في حياة النبي صلى الله عليه وسلم اذا راى رويا قصها على رسول الله صلى الله عليه وسلم فتمنيت ان ارى رويا فاقصها على رسول الله صلى الله عليه وسلم وكنت غلاما شابا، وكنت انام في المسجد على عهد رسول الله صلى الله عليه وسلم فرايت في النوم كان ملكين اخذاني فذهبا بي الى النار فاذا هي مطوية كطى البير، واذا لها قرنان، واذا فيها اناس قد عرفتهم فجعلت اقول اعوذ بالله من النار قال فلقينا ملك اخر فقال لي لم ترع. فقصصتها على حفصة فقصتها حفصة على رسول الله صلى الله عليه وسلم فقال " نعم الرجل عبد الله، لو كان يصلي من الليل ". فكان بعد لا ينام من الليل الا قليلا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத் துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட் டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளி வாசலில் உறங்கக்கூடியவனாக இருந் தேன். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்: இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச்சுவர் இருப்பதைப் போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்” என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடையமாட்டீர்” என்று கூறினார். இதை நான் (என் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறினார்கள். (இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்.2 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا هشام، قال اخبرنا معمر،. وحدثني محمود، قال حدثنا عبد الرزاق، قال اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابيه رضى الله عنه قال كان الرجل في حياة النبي صلى الله عليه وسلم اذا راى رويا قصها على رسول الله صلى الله عليه وسلم فتمنيت ان ارى رويا فاقصها على رسول الله صلى الله عليه وسلم وكنت غلاما شابا، وكنت انام في المسجد على عهد رسول الله صلى الله عليه وسلم فرايت في النوم كان ملكين اخذاني فذهبا بي الى النار فاذا هي مطوية كطى البير، واذا لها قرنان، واذا فيها اناس قد عرفتهم فجعلت اقول اعوذ بالله من النار قال فلقينا ملك اخر فقال لي لم ترع. فقصصتها على حفصة فقصتها حفصة على رسول الله صلى الله عليه وسلم فقال " نعم الرجل عبد الله، لو كان يصلي من الليل ". فكان بعد لا ينام من الليل الا قليلا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது. அவர்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தா செய்வார் கள். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது விட்டு, (ஃபஜ்ர்) தொழுகைக்காகத் தம்மை அழைக்க தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தம்மிடம் வரும்வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டி ருப்பார்கள்.3 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عروة، ان عايشة رضى الله عنها اخبرته ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي احدى عشرة ركعة، كانت تلك صلاته، يسجد السجدة من ذلك قدر ما يقرا احدكم خمسين اية قبل ان يرفع راسه، ويركع ركعتين قبل صلاة الفجر، ثم يضطجع على شقه الايمن حتى ياتيه المنادي للصلاة
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ (இரவுத் தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.4 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا سفيان، عن الاسود، قال سمعت جندبا، يقول اشتكى النبي صلى الله عليه وسلم فلم يقم ليلة او ليلتين
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (சில நாட்கள் ‘வஹீ’ கொண்டு) வரவில்லை. அப்போது குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் “இவரது ஷைத்தான் (இவரை கைவிட்டு விட்டான். எனவேதான்,) அவன் இவரிடம் வருவதில் தாமதம் ஏற்படுகிறது” என்று கூறினாள். அப்போதுதான், “முற்பகல்மீது சத்திய மாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபம் கொள்ளவுமில்லை” (93:1-3) எனும் வசனங்கள் அருளப்பெற்றன. அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، قال اخبرنا سفيان، عن الاسود بن قيس، عن جندب بن عبد الله رضى الله عنه قال احتبس جبريل صلى الله عليه وسلم على النبي صلى الله عليه وسلم فقالت امراة من قريش ابطا عليه شيطانه. فنزلت {والضحى * والليل اذا سجى * ما ودعك ربك وما قلى}
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் (திடீரென) விழித்தெழுந்து (பிரமிப்புடன்), “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன?” என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை கருத்தில் கொண்டு) “இந்த அறைகளி லுள்ள பெண்களை எழுப்பிவிடுபவர் யார்? (அவர்கள் இறைவனைத் தொழட் டும்.) இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن هند بنت الحارث، عن ام سلمة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم استيقظ ليلة فقال " سبحان الله ماذا انزل الليلة من الفتنة، ماذا انزل من الخزاين من يوقظ صواحب الحجرات، يا رب كاسية في الدنيا عارية في الاخرة
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர் களிடமும் இரவு நேரத்தில் வந்து, “நீங்கள் இருவரும் (‘தஹஜ்ஜுத்’) தொழவில் லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நினைத்தால் அவன் எழுப்பிவிடுவான்” என்று கூறினேன். இவ்வாறு நாம் கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் செல்லலானார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே, (நான் உடனடியாகப் பதில் சொன்னதை எண்ணி) “மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்” என்று (18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني علي بن حسين، ان حسين بن علي، اخبره ان علي بن ابي طالب اخبره ان رسول الله صلى الله عليه وسلم طرقه وفاطمة بنت النبي عليه السلام ليلة فقال " الا تصليان ". فقلت يا رسول الله، انفسنا بيد الله، فاذا شاء ان يبعثنا بعثنا. فانصرف حين قلنا ذلك ولم يرجع الى شييا. ثم سمعته وهو مول يضرب فخذه وهو يقول "وكان الانسان اكثر شىء جدلا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில (கூடுதலான) வழிபாடுகளைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட, அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவது உண்டு. (எங்கே தாம் செய்வதைப் போன்று) மக்களும் அவற்றைச் செய்ய, அவர்கள்மீது அவை கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நான் ‘ளுஹா’ தொழுகை தொழுதுவரு கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹா தொழு(து நான் பார்த்)ததில்லை.5 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها قالت ان كان رسول الله صلى الله عليه وسلم ليدع العمل وهو يحب ان يعمل به خشية ان يعمل به الناس فيفرض عليهم، وما سبح رسول الله صلى الله عليه وسلم سبحة الضحى قط، واني لاسبحها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) ஓர் இரவில் பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர் களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதபோது, மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு மக்கள் திரண்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் “நீங்கள் செய்ததை நிச்சயாக நான் பார்த்(துக்கொண்டுதான் இருந்)தேன். இத்தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வர விடாமல் என்னைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.6 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عايشة ام المومنين رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد فصلى بصلاته ناس، ثم صلى من القابلة فكثر الناس، ثم اجتمعوا من الليلة الثالثة او الرابعة، فلم يخرج اليهم رسول الله صلى الله عليه وسلم، فلما اصبح قال " قد رايت الذي صنعتم ولم يمنعني من الخروج اليكم الا اني خشيت ان تفرض عليكم "، وذلك في رمضان
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘தம் பாதங்கள்’ அல்லது ‘தம் கணைக்கால்கள்’ வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது, “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.7 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا مسعر، عن زياد، قال سمعت المغيرة رضى الله عنه يقول ان كان النبي صلى الله عليه وسلم ليقوم ليصلي حتى ترم قدماه او ساقاه، فيقال له فيقول " افلا اكون عبدا شكورا
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று தொழுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்.8 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال حدثنا عمرو بن دينار، ان عمرو بن اوس، اخبره ان عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال له " احب الصلاة الى الله صلاة داود عليه السلام واحب الصيام الى الله صيام داود، وكان ينام نصف الليل ويقوم ثلثه وينام سدسه، ويصوم يوما ويفطر يوما
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான நற்செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நிலையாகச் செய்யும் நற்செயல்’ என்று விடையளித்தார் கள். “(இரவுத் தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சேவல் கூவும் நேரம் (இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதியில்) எழுவார்கள்”’ என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثني عبدان، قال اخبرني ابي، عن شعبة، عن اشعث، سمعت ابي قال، سمعت مسروقا، قال سالت عايشة رضى الله عنها اى العمل كان احب الى النبي صلى الله عليه وسلم قالت الدايم. قلت متى كان يقوم قالت يقوم اذا سمع الصارخ
حدثنا محمد بن سلام قال اخبرنا ابو الاحوص عن الاشعث قال اذا سمع الصارخ قام فصلى
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தங்கியிருக்கும் தினத்தில் (சேவல் கூவும் நேரம் எழுந்து தொழுத பின்னர்) உறங்கிய நிலையில் தவிர, சஹர் நேரம் அவர்களை அடைந்ததில்லை. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا ابراهيم بن سعد، قال ذكر ابي عن ابي سلمة، عن عايشة رضى الله عنها قالت ما الفاه السحر عندي الا نايما. تعني النبي صلى الله عليه وسلم
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (நோன்பு நோற்க) சஹர் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகைக்காக எழுந்து சென்று தொழு தார்கள். இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஒருவர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி) இருந்தது” என்று பதிலளித்தார்கள்.9 அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، قال حدثنا روح، قال حدثنا سعيد، عن قتادة، عن انس بن مالك رضى الله عنه ان نبي الله صلى الله عليه وسلم وزيد بن ثابت رضى الله عنه تسحرا، فلما فرغا من سحورهما قام نبي الله صلى الله عليه وسلم الى الصلاة فصلى. قلنا لانس كم كان بين فراغهما من سحورهما ودخولهما في الصلاة قال كقدر ما يقرا الرجل خمسين اية
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அவர்கள் (நீண்ட நேரம் நிலையில்) நின்றுகொண்டே இருந்தார்கள். நான் தவறான ஒரு முடிவுக்குக்கூட சென்று விட்டேன் (அந்த அளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள்)” என்று கூறினார்கள். நான், “அந்தத் தவறான முடிவு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுவிட்டு உட்கார்ந்து விடலாம் என்று எண்ணினேன்” என விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم ليلة، فلم يزل قايما حتى هممت بامر سوء. قلنا وما هممت قال هممت ان اقعد واذر النبي صلى الله عليه وسلم
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ் ஜுத்’ தொழுவதற்காக எழும்போது, பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைச் சுத்தம் செய்)வார்கள்.10 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا خالد بن عبد الله، عن حصين، عن ابي وايل، عن حذيفة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا قام للتهجد من الليل يشوص فاه بالسواك
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால், ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال ان رجلا قال يا رسول الله، كيف صلاة الليل قال " مثنى مثنى، فاذا خفت الصبح فاوتر بواحدة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பதிமூன்று ரக்அத்களாக இருந்தது. அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، قال حدثني ابو جمرة، عن ابن عباس رضى الله عنهما قال كان صلاة النبي صلى الله عليه وسلم ثلاث عشرة ركعة. يعني بالليل