Loading...

Loading...
நூல்கள்
௨௭ ஹதீஸ்கள்
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள், “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால், பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்; தொழுங்கள்” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا زايدة، قال حدثنا زياد بن علاقة، قال سمعت المغيرة بن شعبة، يقول انكسفت الشمس يوم مات ابراهيم، فقال الناس انكسفت لموت ابراهيم. فقال رسول الله صلى الله عليه وسلم " ان الشمس والقمر ايتان من ايات الله، لا ينكسفان لموت احد ولا لحياته، فاذا رايتموهما فادعوا الله وصلوا حتى ينجلي
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு உரை நிகழ்த்தினார் கள். அவர்கள் (தமது உரையில்) இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்) எனக் கூறினார்கள். அத்தியாயம் :
وقال ابو اسامة حدثنا هشام، قال اخبرتني فاطمة بنت المنذر، عن اسماء، قالت فانصرف رسول الله صلى الله عليه وسلم وقد تجلت الشمس فخطب، فحمد الله بما هو اهله ثم قال " اما بعد
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.9 அத்தியாயம் :
حدثنا محمود، قال حدثنا سعيد بن عامر، عن شعبة، عن يونس، عن الحسن، عن ابي بكرة رضى الله عنه قال انكسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم فصلى ركعتين
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது மேலாடையை இழுத்தபடியே பள்ளி வாசலைச் சென்றடைந்தார்கள். (தொழுது விட்டுச் சென்றிருந்த) மக்களும் அவர்களிடம் வந்து குழுமினர். அப்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (கிரகணம் விலகி) சூரியன் ஒளிர்ந்த தும், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. இ(த்தகைய கிரகண மான)து ஏற்பட்டால், உங்களைவிட்டு இது அகற்றப்படும்வரை தொழுங்கள்; பிரார்த்தி யுங்கள்” என்று கூறினார்கள்.10 இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் காரணம், (கிரகணம் ஏற்பட்ட தினம்) நபி (ஸல்) அவர்களுடைய புதல்வர் இப்ராஹீம் எனப்படுவார் இறந்துவிட்டார். இதையொட்டி மக்கள் (‘இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது’ என்று) பேசிக்கொண்டனர். அத்தியாயம் :
حدثنا ابو معمر، قال حدثنا عبد الوارث، قال حدثنا يونس، عن الحسن، عن ابي بكرة، قال خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم فخرج يجر رداءه حتى انتهى الى المسجد، وثاب الناس اليه فصلى بهم ركعتين، فانجلت الشمس فقال " ان الشمس والقمر ايتان من ايات الله، وانهما لا يخسفان لموت احد، واذا كان ذاك فصلوا وادعوا حتى يكشف ما بكم ". وذاك ان ابنا للنبي صلى الله عليه وسلم مات، يقال له ابراهيم، فقال الناس في ذاك
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சூரிய கிரகணத் தொழுகை தொழுவித்த போது, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகள் செய்தார்கள். அதில் முந்திய முந்திய ருகூஉகள் (அடுத்தடுத்த ருகூஉ களைவிட) நீளமானவையாக இருந்தன. அத்தியாயம் :
حدثنا محمود، قال حدثنا ابو احمد، قال حدثنا سفيان، عن يحيى، عن عمرة، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم صلى بهم في كسوف الشمس اربع ركعات في سجدتين، الاول الاول اطول
حدثنا محمد بن مهران، قال حدثنا الوليد، قال اخبرنا ابن نمر، سمع ابن شهاب، عن عروة، عن عايشة رضى الله عنها جهر النبي صلى الله عليه وسلم في صلاة الخسوف بقراءته، فاذا فرغ من قراءته كبر فركع، واذا رفع من الركعة قال سمع الله لمن حمده، ربنا ولك الحمد. ثم يعاود القراءة في صلاة الكسوف، اربع ركعات في ركعتين واربع سجدات. وقال الاوزاعي وغيره سمعت الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها ان الشمس، خسفت على عهد رسول الله صلى الله عليه وسلم فبعث مناديا بالصلاة جامعة، فتقدم فصلى اربع ركعات في ركعتين واربع سجدات. واخبرني عبد الرحمن بن نمر سمع ابن شهاب مثله. قال الزهري فقلت ما صنع اخوك ذلك، عبد الله بن الزبير ما صلى الا ركعتين مثل الصبح اذ صلى بالمدينة. قال اجل، انه اخطا السنة. تابعه سفيان بن حسين وسليمان بن كثير عن الزهري في الجهر