Loading...

Loading...
நூல்கள்
௧௯௩ ஹதீஸ்கள்
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல் புரிபவர்கள் எதற்காக நற்செயல் புரிய வேண்டும்? (இன்னார் சொர்க்கவாசி, இன்னார் நரகவாசி என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதே?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு வரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.191 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، قال يزيد حدثني مطرف بن عبد الله، عن عمران، قال قلت يا رسول الله فيما يعمل العاملون قال " كل ميسر لما خلق له
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) கலந்துகொண்டார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், “சொர்க்கத்திலோ நரகத்திலோ தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவருமே உங்களிடையே இல்லை” என்று சொன் னார்கள். உடனே மக்கள் “நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு, (நற்செயல்கள் புரியாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று சொல்லிவிட்டு, “எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவர் (சொர்க்கத்தின்) நல்வழியில் செல்வதை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:5-10ஆகிய) இறைவசனங்களைக் கூறினார்கள்.192 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن منصور، والاعمش، سمعا سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم انه كان في جنازة فاخذ عودا فجعل ينكت في الارض فقال " ما منكم من احد الا كتب مقعده من النار او من الجنة ". قالوا الا نتكل. قال " اعملوا فكل ميسر {فاما من اعطى واتقى} ". الاية
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியணைக்குமேலே ‘என் கோபத்தை என் கருணை வென்றுவிட்டது’ அல்லது ‘முந்திவிட்டது’ என்றொரு விதியை எழுதினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.193 அத்தியாயம் :
وقال لي خليفة بن خياط حدثنا معتمر، سمعت ابي، عن قتادة، عن ابي رافع، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لما قضى الله الخلق كتب كتابا عنده غلبت او قال سبقت رحمتي غضبي. فهو عنده فوق العرش
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைப்ப தற்கு முன்பாக தனக்குத்தானே விதி யொன்றை எழுதிக்கொண்டான். ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்பதுதான் அந்த விதி. அது அவனிட முள்ள அரியணைக்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن ابي غالب، حدثنا محمد بن اسماعيل، حدثنا معتمر، سمعت ابي يقول، حدثنا قتادة، ان ابا رافع، حدثه انه، سمع ابا هريرة رضى الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله كتب كتابا قبل ان يخلق الخلق ان رحمتي سبقت غضبي. فهو مكتوب عنده فوق العرش
ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜர்ம் குலத்தாரைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தாருக்கும் அஷ்அரீ குலத்துக்கு மிடையே நேசமும் சகோதரத்துவ உறவும் இருந்துவந்தது. நாங்கள் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுக்குக் கோழி இறைச்சியுடன் உணவு பரிமாறப்பட்டது. அன்னாருடன் பனூ தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் இருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் போன்றிருந்தார். அவரை அபூமூசா (ரலி) அவர்கள் உணவுண்ண அழைத்தார்கள். அப்போது அவர், “இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதைக் கண்டு அதனால் அருவருப்படைந்து அதை உண்ணமாட்டேன் என நான் சத்தியம் செய்துவிட்டேன்” என்று கூறினார். அதைக் கேட்ட அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: இங்கே வா! நான் உனக்கு இதைப் பற்றி (விவரமாக)த் தெரிவிக்கின்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் வாகனம் கேட்டுச் சென்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை வாகனம் எதிலும் ஏற்றியனுப்பமாட்டேன். உங்களை ஏற்றியனுப்ப என்னிடம் வாகனம் எதுவுமில்லை” என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் சில கொண்டுவரப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பற்றி “அஷ்அரீ குலத்து ஆட்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, “வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் சென்றுவிட்டோம். (என்றாலும்,) “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்மை வாகனத்தில் ஏற்றி அனுப்ப மாட்டேன் என்றும், தம்மிடம் நமக்கு வழங்க வாகனம் இல்லை என்றும் சத்தியம் செய்தார்கள். பிறகு நமக்கு வாகனம் வழங்கிவிட்டார்களே! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பிவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் ஒருபோதும் வெற்றியடையமாட்டோம்” என்று எங்க ளுக்குள் பேசிக்கொண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று இதைப் பற்றிக் கூறினோம். அதற்கு அவர்கள் “உங்களை நான் (வாகனத்தில்) ஏற்றியனுப்ப வில்லை; உங்களை அல்லாஹ்வே ஏற்றியனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு சத்தியம் செய்து அஃதல்லாத வேறொன்று அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக எனக்குத் தென்பட்டால், அந்த வெறோன்றையே செய்வேன். சத்தியத்தை முறித்து, அதற் காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.194 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا عبد الوهاب، حدثنا ايوب، عن ابي قلابة، والقاسم التميمي، عن زهدم، قال كان بين هذا الحى من جرم وبين الاشعريين ود واخاء، فكنا عند ابي موسى الاشعري فقرب اليه الطعام فيه لحم دجاج، وعنده رجل من بني تيم الله كانه من الموالي، فدعاه اليه فقال اني رايته ياكل شييا ف��قذرته، فحلفت لا اكله. فقال هلم فلاحدثك عن ذاك، اني اتيت النبي صلى الله عليه وسلم في نفر من الاشعريين نستحمله قال " والله لا احملكم وما عندي ما احملكم ". فاتي النبي صلى الله عليه وسلم بنهب ابل فسال عنا فقال " اين النفر الاشعريون ". فامر لنا بخمس ذود غر الذرى، ثم انطلقنا قلنا ما صنعنا حلف رسول الله صلى الله عليه وسلم لا يحملنا، وما عنده ما يحملنا، ثم حملنا، تغفلنا رسول الله صلى الله عليه وسلم يمينه، والله لا نفلح ابدا، فرجعنا اليه فقلنا له فقال " لست انا احملكم، ولكن الله حملكم، اني والله لا احلف على يمين فارى غيرها خيرا منها، الا اتيت الذي هو خير منه، وتحللتها
அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (அப்துல் கைஸ் குலத்தாரின் நிகழ்ச்சி பற்றிக்) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் வந்து “எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இணை வைப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். ஆகவே, (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் மட்டும்தான் நாங்கள் உங்களை வந்தடைய முடியும். எனவே, சில கட்டளைகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் அவற்றின்படி செயல்பட்டால் சொர்க்கம் செல்லவும், எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அவற்றின்படி நடக்க நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்கும். (அத்தகைய கட்டளைகள் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு இடுங்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் உங்க ளுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளை யிடுகின்றேன். நான்கு விஷயங்களைத் தடை செய்கின்றேன். (நான் கட்டளையிடும் நான்கு விஷயங்கள் இவைதான்:) அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்)கொள்ளும்படி உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சான்றுபகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் கொடுப்பதும் போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும். நான் நான்கு விஷயங்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன். (மது பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட) மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மண் சாடிகளில் நீங்கள் (எதையும்) அருந்தாதீர்கள்” என்று சொன்னார்கள்.195 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، حدثنا قرة بن خالد، حدثنا ابو جمرة الضبعي، قلت لابن عباس فقال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا ان بيننا وبينك المشركين من مضر، وانا لا نصل اليك الا في اشهر حرم، فمرنا بجمل من الامر، ان عملنا به دخلنا الجنة، وندعو اليها من وراءنا. قال " امركم باربع وانهاكم عن اربع، امركم بالايمان بالله، وهل تدرون ما الايمان بالله شهادة ان لا اله الا الله، واقام الصلاة، وايتاء الزكاة، وتعطوا من المغنم الخمس، وانهاكم عن اربع لا تشربوا في الدباء، والنقير، والظروف المزفتة، والحنتمة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.196 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا الليث، عن نافع، عن القاسم بن محمد، عن عايشة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال " ان اصحاب هذه الصور يعذبون يوم القيامة، ويقال لهم احيوا ما خلقتم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த (உயிரினங்களின்) உருவங் களைப் படைத்தோர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களி டம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.197 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " ان اصحاب هذه الصور يعذبون يوم القيامة، ويقال لهم احيوا ما خلقتم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிடப் பெரிய அக்கிர மக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு தீட்டப்படாத கோதுமையையேனும் படைத்துக் காட்டட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.198 அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابن فضيل، عن عمارة، عن ابي زرعة، سمع ابا هريرة رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " قال الله عز وجل ومن اظلم ممن ذهب يخلق كخلقي، فليخلقوا ذرة، او ليخلقوا حبة او شعيرة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற இறைநம்பிக்கை யாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது, பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது. குர்ஆனை ஓதுகின்ற பாவியின் நிலை, துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத பாவியின் நிலை, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.199 அத்தியாயம் :
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس، عن ابي موسى رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " مثل المومن الذي يقرا القران كالاترجة، طعمها طيب وريحها طيب، والذي لا يقرا كالتمرة، طعمها طيب ولا ريح لها، ومثل الفاجر الذي يقرا القران كمثل الريحانة، ريحها طيب وطعمها مر، ومثل الفاجر الذي لا يقرا القران كمثل الحنظلة، طعمها مر ولا ريح لها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர் களைப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அந்த உண்மை யான சொல், (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக்கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகின்றான்” என்று பதிலளித்தார்கள்.200 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، ح وحدثني احمد بن صالح، حدثنا عنبسة، حدثنا يونس، عن ابن شهاب، اخبرني يحيى بن عروة بن الزبير، انه سمع عروة بن الزبير، قالت عايشة رضى الله عنها سال اناس النبي صلى الله عليه وسلم عن الكهان فقال " انهم ليسوا بشىء ". فقالوا يا رسول الله فانهم يحدثون بالشىء يكون حقا. قال فقال النبي صلى الله عليه وسلم " تلك الكلمة من الحق يخطفها الجني فيقرقرها في اذن وليه كقرقرة الدجاجة، فيخلطون فيه اكثر من ماية كذبة
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டை யாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்கு (தானாக)த் திரும்பாதவரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்” என்று சொன்னார்கள். “அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا مهدي بن ميمون، سمعت محمد بن سيرين، يحدث عن معبد بن سيرين، عن ابي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يخرج ناس من قبل المشرق ويقرءون القران لا يجاوز تراقيهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ثم لا يعودون فيه حتى يعود السهم الى فوقه ". قيل ما سيماهم. قال " سيماهم التحليق ". او قال " التسبيد
حدثني احمد بن اشكاب، حدثنا محمد بن فضيل، عن عمارة بن القعقاع، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " كلمتان حبيبتان الى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان سبحان الله وبحمده، سبحان الله العظيم