Loading...
Loading...
நூல்கள்
160 ஹதீஸ்கள்
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்) தமது வீட்டில் ஊர்திப் பிராணி (குதிரை) இருக்க, (திருக்குர்ஆனின்) “அல்கஹ்ஃப்' (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்ட...
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள்) இடம் அவர்களது வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் விலைக்கு வ...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், “கவலைப்பட வேண்டாம். இறைவன் நாட...
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதர் கிறித்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா' மற்றும் “ஆலு இம்ரான்' ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார். அவ...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிட்டால் அவருக் குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். (தற்போதுள்ள கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார் -அறிவிப்பாளர் (முந்தைய ஹதீஸைப் போலவே) கூறிவிட்டு(த் தொடர்ந்து) சொன்னார்- அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கர...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிóருந்து புலம் பெயர்ந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி “யமாமா' அல்லது “ஹஜர்' ஆகத்தான் இருக்கும் என்று நான் எண்ணினேன்.145 ஆனால், அ...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எப்போதும் என்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு அவரைப் போன்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்கள் ஒரு போர்வை யுடன் வெளியே வந்தார்கள். அப்போது தமது தலையில் கறுப்புக் கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள்....
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (தம் பேரப்பிள்ளை) ஹசன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே சொற்பொழிவு மேடையில் ஏறினார்கள். பிறகு, “இந்த என் மகன், தலைவர் ஆவார். அல்லாஹ் இவர் வாயில...
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜஅஃபர் (ரலி) அவர்களும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி (ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வா...
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “(எனக்குத் திருமணமானபோது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், “எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?” என்று பதிலளி...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணைவைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற...
அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்க...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு திடóல் ஒன்றுதிரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி- அல்லது இரண்டு வாளிகள்- இறைத்தார். சிறிது நேரம் அவ...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். அத்தி...