Loading...

Loading...
நூல்கள்
௩௫ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க புறப்பட்டுச் சென்றபோது அவர்களை நான் பார்த்தேன். (உரையாற்றியபின் பிரார்த்திக்க முற்பட்டபோது) அவர்கள் மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி, கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்கலானார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். பிறகு எங்களுக்கு இரண்டு ரக்அத் கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا ابن ابي ذيب، عن الزهري، عن عباد بن تميم، عن عمه، قال رايت النبي صلى الله عليه وسلم يوم خرج يستسقي قال فحول الى الناس ظهره، واستقبل القبلة يدعو، ثم حول رداءه، ثم صلى لنا ركعتين جهر فيهما بالقراءة
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது, இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண் டார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا سفيان، عن عبد الله بن ابي بكر، عن عباد بن تميم، عن عمه، ان النبي صلى الله عليه وسلم استسقى فصلى ركعتين، وقلب رداءه
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க தொழும் திடலுக்குச் சென்றார் கள். கிப்லாவை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “தமது மேல்துண்டின் வலப்புறத்தை இடப் பக்கத் தோளின்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا سفيان، عن عبد الله بن ابي بكر، سمع عباد بن تميم، عن عمه، قال خرج النبي صلى الله عليه وسلم الى المصلى يستسقي، واستقبل القبلة فصلى ركعتين، وقلب رداءه. قال سفيان فاخبرني المسعودي عن ابي بكر قال جعل اليمين على الشمال
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகை) தொழுவதற்காகத் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ‘அவர்கள் பிரார்த்தனை புரிந்தபோது’ அல்லது ‘பிரார்த்தனை புரிய முற்பட்ட போது’ கிப்லாவை முன்னோக்கினார்கள். தமது மேல்துண்டை (அதன் வலப் புறத்தை இடப் பக்க தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘மாஸினீ’ குலத்தைச் சேர்ந்தவர்; முன்பு இடம்பெற்ற (1022ஆவது) ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூஃபாவாசி ஆவார். அத்தியாயம் :
حدثنا محمد، قال اخبرنا عبد الوهاب، قال حدثنا يحيى بن سعيد، قال اخبرني ابو بكر بن محمد، ان عباد بن تميم، اخبره ان عبد الله بن زيد الانصاري اخبره ان النبي صلى الله عليه وسلم خرج الى المصلى يصلي، وانه لما دعا او اراد ان يدعو استقبل القبلة وحول رداءه. قال ابو عبد الله ابن زيد هذا مازني، والاول كوفي هو ابن يزيد
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளி யேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டு விட்டன” என்று கூறினார். அத்தியாயம் :
قال ايوب بن سليمان حدثني ابو بكر بن ابي اويس، عن سليمان بن بلال، قال يحيى بن سعيد سمعت انس بن مالك، قال اتى رجل اعرابي من اهل البدو الى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال يا رسول الله، هلكت الماشية هلك العيال هلك الناس. فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو، ورفع الناس ايديهم معه يدعون، قال فما خرجنا من المسجد حتى مطرنا، فما زلنا نمطر حتى كانت الجمعة الاخرى، فاتى الرجل الى نبي الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، بشق المسافر، ومنع الطريق
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய அக்குள் களின் வெண்மையை நான் பார்க்குமள வுக்கு (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وقال الاويسي حدثني محمد بن جعفر، عن يحيى بن سعيد، وشريك، سمعا انسا، عن النبي صلى الله عليه وسلم انه رفع يديه حتى رايت بياض ابطيه
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின்போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள்; (மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا يحيى، وابن ابي عدي، عن سعيد، عن قتادة، عن انس بن مالك، قال كان النبي صلى الله عليه وسلم لا يرفع يديه في شىء من دعايه الا في الاستسقاء، وانه يرفع حتى يرى بياض ابطيه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ‘ஸய்யிபன் நாஃபிஅன்’ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد هو ابن مقاتل ابو الحسن المروزي قال اخبرنا عبد الله، قال اخبرنا عبيد الله، عن نافع، عن القاسم بن محمد، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم كان اذا راى المطر قال " صيبا نافعا ". تابعه القاسم بن يحيى عن عبيد الله. ورواه الاوزاعي وعقيل عن نافع
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.- அப்போது ஒரு சிறு மேகம்கூட வானத்தில் காணப்பட வில்லை.- (நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை செய்து முடிப்பதற்குள்) மலை களைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மேடையி-ருந்து இறங்கியிருக்க வில்லை; அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படியே) மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘மற்றொரு மனிதர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துவிட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்” என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம! ஹவாலைனா, வ லா அலைனா” (இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இம்மழையைத் திருப்பிவிடுவாயாக எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே) எனப் பிரார்த்தித்தார்கள். வானத்தின் எப்பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அங்கெல்லாம் மேகங்கள் கலைந்துசெல்லாமல் இருக்கவில்லை. (மதீனா நகரைவிட்டு மேகம் விலகி அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டதால்) மதீனா பாதாளம் போன்று மாறிவிட்டது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، قال اخبرنا عبد الله بن المبارك، قال اخبرنا الاوزاعي، قال حدثنا اسحاق بن عبد الله بن ابي طلحة الانصاري، قال حدثني انس بن مالك، قال اصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبينا رسول الله صلى الله عليه وسلم يخطب على المنبر يوم الجمعة قام اعرابي فقال يا رسول الله، هلك المال وجاع العيال، فادع الله لنا ان يسقينا. قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه، وما في السماء قزعة، قال فثار سحاب امثال الجبال، ثم لم ينزل عن منبره حتى رايت المطر يتحادر على لحيته، قال فمطرنا يومنا ذلك، وفي الغد ومن بعد الغد والذي يليه الى الجمعة الاخرى، فقام ذلك الاعرابي او رجل غيره فقال يا رسول الله، تهدم البناء وغرق المال، فادع الله لنا. فرفع رسول الله صلى الله عليه وسلم يديه وقال " اللهم حوالينا ولا علينا ". قال فما جعل يشير بيده الى ناحية من السماء الا تفرجت حتى صارت المدينة في مثل الجوبة، حتى سال الوادي وادي قناة شهرا. قال فلم يجي احد من ناحية الا حدث بالجود
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடுமையான காற்று வீசும்போது, அ(தன் பாதிப்பான)து நபி (ஸல்) அவர் களது முகத்தில் காணப்படும்.11 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال اخبرنا محمد بن جعفر، قال اخبرني حميد، انه سمع انسا، يقول كانت الريح الشديدة اذا هبت عرف ذلك في وجه النبي صلى الله عليه وسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘ஸபா’ எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆத்’ சமூகத்தார் (‘தபூர்’ எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர்.12 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم، قال حدثنا شعبة، عن الحكم، عن مجاهد، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " نصرت بالصبا، واهلكت عاد بالدبور
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி கைப்பற்றப்படாத வரை, நில நடுக்கங்கள் அதிகமாகாத வரை, காலம் சுருங்கிடாத வரை, குழப்பங்கள் வெளிப்படாத வரை, ‘ஹர்ஜ்’ (கொந்தளிப்பு) மிகுதியாகாத வரை, -ஹர்ஜ் என்பது கொலையாகும்; கொலையாகும்- உங்களிடையே செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، قال اخبرنا ابو الزناد، عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " لا تقوم الساعة حتى يقبض العلم، وتكثر الزلازل، ويتقارب الزمان، وتظهر الفتن، ويكثر الهرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيض
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைவா! எங்கள் ‘ஷாம்’ (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்கு வாயாக! இறைவா! எங்கள் ‘யமன்’ நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்குவாயாக!” என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள். மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்த் (இராக்) நாட்டிலும் (வளம் ஏற்படப் பிரார்த்தியுங் களேன்!)” என்று (இரண்டு முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، قال حدثنا حسين بن الحسن، قال حدثنا ابن عون، عن نافع، عن ابن عمر، قال اللهم بارك لنا في شامنا وفي يمننا. قال قالوا وفي نجدنا قال قال اللهم بارك لنا في شامنا وفي يمننا. قال قالوا وفي نجدنا قال قال هناك الزلازل والفتن، وبها يطلع قرن الشيطان
ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள்.- அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது, “என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (நன்றி கொன்று) என்னை மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். ‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களே என்னை நம்பி நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். ‘இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது)’ என்று கூறியவர்களோ (நன்றி கொன்று) என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்” என அல்லாஹ் சொன்னான் என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن صالح بن كيسان، عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، عن زيد بن خالد الجهني، انه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على اثر سماء كانت من الليلة، فلما انصرف النبي صلى الله عليه وسلم اقبل على الناس فقال " هل تدرون ماذا قال ربكم ". قالوا الله ورسوله اعلم. قال " اصبح من عبادي مومن بي وكافر، فاما من قال مطرنا بفضل الله ورحمته. فذلك مومن بي كافر بالكوكب، واما من قال بنوء كذا وكذا. فذلك كافر بي مومن بالكوكب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் என்ன உருவாகும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும், தான் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது. எந்த உயிரும், தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.15 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن عبد الله بن دينار، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " مفتاح الغيب خمس لا يعلمها الا الله لا يعلم احد ما يكون في غد، ولا يعلم احد ما يكون في الارحام، ولا تعلم نفس ماذا تكسب غدا، وما تدري نفس باى ارض تموت، وما يدري احد متى يجيء المطر