ஹதீஸ்கள்
#1033
ஸஹீஹ் அல்-புகாரீ - Invoking Allah for Rain (Istisqaa)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.- அப்போது ஒரு சிறு மேகம்கூட வானத்தில் காணப்பட வில்லை.- (நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை செய்து முடிப்பதற்குள்) மலை களைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மேடையி-ருந்து இறங்கியிருக்க வில்லை; அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படியே) மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘மற்றொரு மனிதர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துவிட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்” என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம! ஹவாலைனா, வ லா அலைனா” (இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இம்மழையைத் திருப்பிவிடுவாயாக எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே) எனப் பிரார்த்தித்தார்கள். வானத்தின் எப்பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அங்கெல்லாம் மேகங்கள் கலைந்துசெல்லாமல் இருக்கவில்லை. (மதீனா நகரைவிட்டு மேகம் விலகி அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டதால்) மதீனா பாதாளம் போன்று மாறிவிட்டது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invoking Allah for Rain (Istisqaa)
- Hadith Index
- #1033
- Book Index
- 28
Grades
- -