Loading...

Loading...
நூல்கள்
௬௬ ஹதீஸ்கள்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆ) தொழுதுகொண்டிருந்தோம். அப்போது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டக (வணிக)க் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில்தான், “அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக்கூடியதையோ கண்டால், உம்மை நிற்க விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (62:11) என்ற இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا معاوية بن عمرو، قال حدثنا زايدة، عن حصين، عن سالم بن ابي الجعد، قال حدثنا جابر بن عبد الله، قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم اذ اقبلت عير تحمل طعاما، فالتفتوا اليها حتى ما بقي مع النبي صلى الله عليه وسلم الا اثنا عشر رجلا، فنزلت هذه الاية {واذا راوا تجارة او لهوا انفضوا اليها وتركوك قايما}
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் அதற்குப்பின் இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு தமது இல்லத்தில் இரண்டு ரக்அத் களும் தொழுவார்கள்; இஷா தொழுகைக் குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஜுமுஆ தொழுகைக்குப்பின் தமது இல்லத்திற்குத் திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (இல்லத்திற்குச் சென்றதும்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.13 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي قبل الظهر ركعتين، وبعدها ركعتين، وبعد المغرب ركعتين في بيته، وبعد العشاء ركعتين وكان لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாய்க்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டு தான் அந்த உணவில் இறைச்சி போன்று அமையும். நாங்கள் ஜுமுஆ தொழுகை தொழுது விட்டுத் திரும்பி வந்து அவருக்கு ‘சலாம்’ சொல்வோம். அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவரது அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக் கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل، قال كانت فينا امراة تجعل على اربعاء في مزرعة لها سلقا، فكانت اذا كان يوم جمعة تنزع اصول السلق فتجعله في قدر، ثم تجعل عليه قبضة من شعير تطحنها، فتكون اصول السلق عرقه، وكنا ننصرف من صلاة الجمعة فنسلم عليها، فتقرب ذلك الطعام الينا فنلعقه، وكنا نتمنى يوم الجمعة لطعامها ذلك
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் காலை உணவு அருந்துவோம்; மதிய ஓய்வு மேற்கொள்வோம். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، قال حدثنا ابن ابي حازم، عن ابيه، عن سهل، بهذا وقال ما كنا نقيل ولا نتغدى الا بعد الجمعة
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஜுமுஆ தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே சென்று விடுவோம். அதற்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம். அத்தியாயம் :
حدثنا محمد بن عقبة الشيباني، قال حدثنا ابو اسحاق الفزاري، عن حميد، قال سمعت انسا، يقول كنا نبكر الى الجمعة ثم نقيل
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆ தொழுகை தொழுவோம். அதன் பிறகே மதிய ஓய்வு நிகழும். அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل، قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم الجمعة ثم تكون القايلة