ஹதீஸ்கள்
#7521
ஸஹீஹ் முஸ்லிம் - Zuhd and Softening of Hearts
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள், என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம்) அவர்களது வீட்டிற்கு வந்து,அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகச்சேணத்தை விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடம், "இதை என் வீடுவரை சுமந்துவர உங்கள் புதல்வரை என்னுடன் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். என் தந்தை என்னிடம், "இதைச் சுமந்து வா" என்று சொன்னார்கள். அவ்வாறே அதை நான் சுமந்து சென்றேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அதன் விலையைப் பெற்றுக்கொள்வதற்காக என் தந்தையும் புறப்பட்டுவந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "அபூபக்ரே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத்) சென்றபோது, இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என்பதை எனக்கு அறிவியுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம் (அறிவிக்கிறேன்): நாங்கள் (மூன்று நாட்கள் "ஸவ்ர்" குகையில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறி) அந்த இரவு முழுவதும் பயணம் செய்து, (அடுத்த நாளின்) நண்பகல் நேரமும் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் அங்கு இறங்கினோம். நான் அந்தப்பாறையை நோக்கிச் சென்று என் கையால் ஓரிடத்தை, அதன் நிழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்குவதற்காகச் சமப்படுத்தினேன். பிறகு அந்த இடத்தில் ஒரு தோல் விரிப்பை விரித்தேன். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்துக்கொள்கிறேன்;நீங்கள் (நிம்மதியாக) உறங்குங்கள்" என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் அந்தப் பாறையை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். நாங்கள் வந்த நோக்கத்துடனேயே அவனும் வந்தான். அப்போது அவனை நான் எதிர்கொண்டு, "நீ யாருடைய பணியாள், இளைஞரே?" என்று கேட்டேன். அவன், "இந்த (மக்கா) நகரவாசிகளில் (இன்ன பெயருடைய) ஒரு மனிதரின் பணியாள்" என்று பதிலளித்தான். நான் "உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தான். "அவ்வாறாயின், எனக்காகப் பால் கற(ந்து கொடு)ப்பாயா?" என்று கேட்டேன். அவன் "ஆம் (கொடுப்பேன்)" என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், "மண், முடி, தூசு ஆகிய வற்றிலிருந்து (ஆட்டின்) மடியை உதறி (சுத்தப்படுத்தி)க்கொள்" என்று சொன்னேன். -("பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தம் இரு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக்காட்டுவதை நான் கண்டேன்" என அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) பிறகு அந்த இடையன் தன்னிடமிருந்த ஒரு மரப்பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் ஒரு தோல் பாத்திரம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நீர் புகட்டவும், அவர்கள் நீர் அருந்தி, அங்கத் தூய்மை செய்யவும் (அது பயன்பட்டது). (அதை நான் என்னுடன் கொண்டுவந்திருந்தேன்.) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்,) அவர்களிடம் நான் சென்ற நேரமும் அவர்கள் (தூக்கத்திலிருந்து) எழுந்த நேரமும் ஒன்றாக அமைந்துவிட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப்பாத்திரத்திலிருந்த) பாலில் அதன் அடிப்பகுதி குளிரும்வரை (அதன் அடர்த்தி நீங்கும்வரை) ஊற்றினேன். பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பாலைப் பருகுங்கள்" என்று சொன்னேன். நான் திருப்தியடையும்வரை அவர்கள் பருகினார்கள். பிறகு, "(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (வந்துவிட்டது)" என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களை (மக்கா இணை வைப்பாளர்களில் ஒருவராயிருந்த) சுராக்கா பின் மாலிக் பின்தொடர்ந்து வந்தார். நாங்கள் பூமியின் ஓர் இறுகிய பகுதியில் இருந்தோம். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளால்) நாம் பின்தொடரப்படுகிறோம்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று சொன்னார்கள். பிறகு சுராக்காவுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சுராக்காவுடன் அவரது குதிரை தனது வயிறுவரை பூமியில் புதைந்துவிட்டது. உடனே சுராக்கா, "நீங்கள் இருவரும் எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டீர்கள் என்று நான் அறிந்துகொண்டேன். ஆகவே,எனக்காக (இந்தத் தண்டனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; உங்களைத் தேடி வருபவர்களை நான் திருப்பி அனுப்பி விடுவேன் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி" என்று சொன்னார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவர் (அந்தத் தண்டனையிலிருந்து) தப்பினார். அப்போதிருந்து அவர் தம்மைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், "உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை" என்று கூறாமல் விடவில்லை. மேலும், (எங்களைத் தேடிவந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பி அனுப்பாமல் அவர் இருக்கவில்லை. அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். - மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் என் தந்தை (ஆஸிப் பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்களிடமிருந்து பதிமூன்று திர்ஹங்களுக்கு ஒட்டகச் சேணமொன்றை விலைக்கு வாங்கினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அவற்றில் உஸ்மான் பின் உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது: சுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) நெருங்கியபோது, அவருக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை வயிறுவரை பூமிக்குள் புதைந்துவிட்டது. சுராக்கா குதிரையிலிருந்து குதித்து, "முஹம்மதே! இது உங்களுடைய வேலைதான் என்று நான் அறிந்துகொண்டேன். (நான் சிக்கிக் கொண்டிருக்கும்) இந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். எனக்குப் பின்னால் (உங்களைத் தேடிவர) இருப்போரிடமிருந்து உங்களை (காட்டிக் கொடுக்காமல்) நான் மறைத்துவிடுவதற்கு உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். இதோ எனது அம்புக் கூடு. இதிலிருந்து நீங்கள் (என் வாக்குறுதிக்கு அடையாளமாக) அம்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனது ஒட்டகத்தையும் என் அடிமைகளையும் இன்னின்ன இடத்தில் கடந்து செல்வீர்கள். அப்போது உங்களுக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவை யில்லை" என்று கூறிவிட்டார்கள். - பிறகு நாங்கள் இரவு நேரத்தில் மதீனாவுக்கு வந்தோம். அப்போது மதீனாவாசிகள் அவர்களில் யாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்குவது என்ற விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் பாட்டனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் தாய்மாமன்களான "பனுந் நஜ்ஜார்" குலத்தாரிடம் நான் தங்கிக்கொள்கிறேன். இதன் மூலம் அவர்களைக் கௌரவப்படுத்துகிறேன்" என்று கூறினார்கள்.அப்போது ஆண்களும் பெண்களும் (தம் வீடுகளுக்கு மேலே ஏறி(ப்பார்த்துக் கொண்டிருந்த)னர். சிறுவர்களும் பணியாட்களும் (மதீனாவின்) தெருக்களில் "முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிக்கொண்டு (மகிழ்ச்சியுடன்) கலைந்து சென்றனர்.. அத்தியாயம் :
حدثني سلمة بن شبيب، حدثنا الحسن بن اعين، حدثنا زهير، حدثنا ابو اسحاق، قال سمعت البراء بن عازب، يقول جاء ابو بكر الصديق الى ابي في منزله فاشترى منه رحلا فقال لعازب ابعث معي ابنك يحمله معي الى منزلي فقال لي ابي احمله . فحملته وخرج ابي معه ينتقد ثمنه فقال له ابي يا ابا بكر حدثني كيف صنعتما ليلة سريت مع رسول الله صلى الله عليه وسلم قال نعم اسرينا ليلتنا كلها حتى قام قايم الظهيرة وخلا الطريق فلا يمر فيه احد حتى رفعت لنا صخرة طويلة لها ظل لم تات عليه الشمس بعد فنزلنا عندها فاتيت الصخرة فسويت بيدي مكانا ينام فيه النبي صلى الله عليه وسلم في ظلها ثم بسطت عليه فروة ثم قلت نم يا رسول الله وانا انفض لك ما حولك فنام وخرجت انفض ما حوله فاذا انا براعي غنم مقبل بغنمه الى الصخرة يريد منها الذي اردنا فلقيته فقلت لمن انت يا غلام فقال لرجل من اهل المدينة قلت افي غنمك لبن قال نعم . قلت افتحلب لي قال نعم . فاخذ شاة فقلت له انفض الضرع من الشعر والتراب والقذى - قال فرايت البراء يضرب بيده على الاخرى ينفض - فحلب لي في قعب معه كثبة من لبن قال ومعي اداوة ارتوي فيها للنبي صلى الله عليه وسلم ليشرب منها ويتوضا - قال - فاتيت النبي صلى الله عليه وسلم وكرهت ان اوقظه من نومه فوافقته استيقظ فصببت على اللبن من الماء حتى برد اسفله فقلت يا رسول الله اشرب من هذا اللبن - قال - فشرب حتى رضيت ثم قال " الم يان للرحيل " . قلت بلى . قال فارتحلنا بعد ما زالت الشمس واتبعنا سراقة بن مالك - قال - ونحن في جلد من الارض فقلت يا رسول الله اتينا فقال " لا تحزن ان الله معنا " . فدعا عليه رسول الله صلى الله عليه وسلم فارتطمت فرسه الى بطنها ارى فقال اني قد علمت انكما قد دعوتما على فادعوا لي فالله لكما ان ارد عنكما الطلب . فدعا الله فنجى فرجع لا يلقى احدا الا قال قد كفيتكم ما ها هنا فلا يلقى احدا الا رده - قال - ووفى لنا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zuhd and Softening of Hearts
- Hadith Index
- #7521
- Book Index
- 95
Grades
- -
