ஹதீஸ்கள்
#7183
ஸஹீஹ் முஸ்லிம் - Paradise, its Description, its Bounties and its Inhabitants
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பின் "சொர்க்கவாசிகளே!" என அழைக்கப்படும் என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (19:39 ஆவது வசனத்தில்) குறிப்பிடுகின்றான்"என இடம்பெற்றுள்ளது. "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த வசனத்தை) ஓதிக்காட்டினார்கள்"என்பதும், "தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்" என்பதும் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، والحسن بن علي الحلواني، وعبد بن حميد، قال عبد اخبرني وقال الاخران، حدثنا يعقوب، - وهو ابن ابراهيم بن سعد - حدثنا ابي، عن صالح، حدثنا نافع، ان عبد الله، قال ان رسول الله صلى الله عليه وسلم قال " يدخل الله اهل الجنة الجنة ويدخل اهل النار النار ثم يقوم موذن بينهم فيقول يا اهل الجنة لا موت ويا اهل النار لا موت كل خالد فيما هو فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7183
- Book Index
- 52
Grades
- -
