ஹதீஸ்கள்
#7173
ஸஹீஹ் முஸ்லிம் - Paradise, its Description, its Bounties and its Inhabitants
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்" என்றும், சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்" என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்" என்று சொன்னான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثني محمد بن رافع، حدثنا شبابة، حدثني ورقاء، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " تحاجت النار والجنة فقالت النار اوثرت بالمتكبرين والمتجبرين . وقالت الجنة فما لي لا يدخلني الا ضعفاء الناس وسقطهم وعجزهم . فقال الله للجنة انت رحمتي ارحم بك من اشاء من عبادي . وقال للنار انت عذابي اعذب بك من اشاء من عبادي ولكل واحدة منكم ملوها فاما النار فلا تمتلي . فيضع قدمه عليها فتقول قط قط . فهنالك تمتلي ويزوى بعضها الى بعض
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7173
- Book Index
- 42
Grades
- -
