ஹதீஸ்கள்
#7086
ஸஹீஹ் முஸ்லிம் - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைவான வேதனை அளிக்கப்படுபவரிடம், "பூமியும் அதிலிருப்பவையும் உனக்கே சொந்தம் என்றிருந்தால், நீ அவற்றை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) முன்வருவாய் அல்லவா?" என்று வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், "நீ (ஆதி மனிதர்) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்த போது, இதைவிட எளிதான ஒன்றையே (அதாவது) எனக்கு எதையும் இணை கற்பிக்காதே! உன்னை நான் நரகத்தில் புகுத்தமாட்டேன் என்பதையே) உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!" என்று கூறுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "உன்னை நான் நரகத்தில் புகுத்த மாட்டேன்" எனும் குறிப்பு இல்லை. அத்தியாயம் :
وحدثنا عبد بن حميد، حدثنا روح بن عبادة، ح وحدثني عمرو بن زرارة، اخبرنا عبد الوهاب، - يعني ابن عطاء - كلاهما عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم بمثله غير انه قال " فيقال له كذبت قد سيلت ما هو ايسر من ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7086
- Book Index
- 40
Grades
- -
