ஹதீஸ்கள்
#5629
ஸஹீஹ் முஸ்லிம் - Manners and Etiquette
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "ஒன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "இரண்டு" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் மூன்றாவது முறை அனுமதி கேட்ட போது, உமர் (ரலி) அவர்கள் "மூன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தம்மிடம் திரும்பிவரச் செய்து, "இவ்வாறு நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உம்மை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்" என்று கூறினார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும்" என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே நான், "உங்களுடைய முஸ்லிம் சகோதரர் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கிறீர்களே?" என்று கூறிவிட்டு, (அபூமூசா (ரலி) அவர்களிடம்) "நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாவேன்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இதோ அபூசயீத் (சாட்சி)" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا بشر، - يعني ابن مفضل - حدثنا سعيد، بن يزيد عن ابي نضرة، عن ابي سعيد، ان ابا موسى، اتى باب عمر فاستاذن فقال عمر واحدة . ثم استاذن الثانية فقال عمر ثنتان . ثم استاذن الثالثة فقال عمر ثلاث . ثم انصرف فاتبعه فرده فقال ان كان هذا شييا حفظته من رسول الله صلى الله عليه وسلم فها والا فلاجعلنك عظة . قال ابو سعيد فاتانا فقال الم تعلموا ان رسول الله صلى الله عليه وسلم قال " الاستيذان ثلاث " . قال فجعلوا يضحكون - قال - فقلت اتاكم اخوكم المسلم قد افزع تضحكون انطلق فانا شريكك في هذه العقوبة . فاتاه فقال هذا ابو سعيد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5629
- Book Index
- 44
Grades
- -
