ஹதீஸ்கள்
#5610
ஸஹீஹ் முஸ்லிம் - Manners and Etiquette
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் "மன்னாதி மன்னன்" (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) வேறு அரசனில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், "("மலிக்குல் அம்லாக்" என்பதற்கு) "ஷாஹான் ஷாஹ்" (மன்னாதி மன்னன்) என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்" என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளரான அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ர் இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம் ("மிகவும் கேவலமான" என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "அக்னஉ" எனும் சொல் குறித்துக்கேட்டேன். அதற்கு அபூஅம்ர் (ரஹ்) அவர்கள், இதற்கு "அவ்ளஉ" (மிகவும் கீழ்த்தரமானது) என்று பொருள் என விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن عمرو الاشعثي، واحمد بن حنبل، وابو بكر بن ابي شيبة - واللفظ لاحمد - قال الاشعثي اخبرنا وقال الاخران، حدثنا سفيان بن عيينة، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ان اخنع اسم عند الله رجل تسمى ملك الاملاك " . زاد ابن ابي شيبة في روايته " لا مالك الا الله عز وجل " . قال الاشعثي قال سفيان مثل شاهان شاه . وقال احمد بن حنبل سالت ابا عمرو عن اخنع فقال اوضع
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5610
- Book Index
- 25
Grades
- -
