ஹதீஸ்கள்
#5595
ஸஹீஹ் முஸ்லிம் - Manners and Etiquette
மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (சற்று) கூடுதலான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஹுஸைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றும், சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஏனெனில், உங்களிடையே நான் பங்கீடு செய்பவனாகவே உள்ளேன்" என்றும் இடம்பெற்றுள்ளது. - ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அன்சாரிகளான) எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் "காசிம்" எனப் பெயர் சூட்டினார். நாங்கள், "உம்மை அபுல்காசிம் (காசிமின் தந்தை) எனும் குறிப்புப் பெயரால் அழைக்கவுமாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உம்மை மகிழ்விக்கவு மாட்டோம்" என்று கூறினோம். ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப்பெயரிட்டுக் கொள்வீராக" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் "உம்மை நாங்கள் மகிழ்விக்கவுமாட்டோம்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
حدثنا عمرو الناقد، ومحمد بن عبد الله بن نمير، جميعا عن سفيان، قال عمرو حدثنا سفيان بن عيينة، حدثنا ابن المنكدر، انه سمع جابر بن عبد الله، يقول ولد لرجل منا غلام فسماه القاسم فقلنا لا نكنيك ابا القاسم ولا ننعمك عينا . فاتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال " اسم ابنك عبد الرحمن
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5595
- Book Index
- 10
Grades
- -
