ஹதீஸ்கள்
#5055
ஸஹீஹ் முஸ்லிம் - Hunting, Slaughter, and what may be Eaten
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். - மேற்கண்ட ஹதீஸ் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل ابن علية، عن خالد الحذاء، عن ابي قلابة، عن ابي الاشعث، عن شداد بن اوس، قال ثنتان حفظتهما عن رسول الله صلى الله عليه وسلم قال " ان الله كتب الاحسان على كل شىء فاذا قتلتم فاحسنوا القتلة واذا ذبحتم فاحسنوا الذبح وليحد احدكم شفرته فليرح ذبيحته
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Hunting, Slaughter, and what may be Eaten
- Hadith Index
- #5055
- Book Index
- 84
Grades
- -
