ஹதீஸ்கள்
#4497
ஸஹீஹ் முஸ்லிம் - Judicial Decisions
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை" என்று கூறினார். நிலத்தை விற்றவரோ, "நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?" என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்" என்று சொன்னார். மற்றொருவர், "எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், "அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார். அத்தியாயம் :
حدثنا محمد بن رافع، حدثنا عبد الرزاق، حدثنا معمر، عن همام بن منبه، قال هذا ما حدثنا ابو هريرة، عن رسول الله صلى الله عليه وسلم فذكر احاديث منها وقال رسول الله صلى الله عليه وسلم " اشترى رجل من رجل عقارا له فوجد الرجل الذي اشترى العقار في عقاره جرة فيها ذهب فقال له الذي اشترى العقار خذ ذهبك مني انما اشتريت منك الارض ولم ابتع منك الذهب . فقال الذي شرى الارض انما بعتك الارض وما فيها - قال - فتحاكما الى رجل فقال الذي تحاكما اليه الكما ولد فقال احدهما لي غلام وقال الاخر لي جارية . قال انكحوا الغلام الجارية وانفقوا على انفسكما منه وتصدقا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Judicial Decisions
- Hadith Index
- #4497
- Book Index
- 28
Grades
- -
