ஹதீஸ்கள்
#4493
ஸஹீஹ் முஸ்லிம் - Judicial Decisions
சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்"என்று கூறி (விளக்கம் கோரி)னேன். அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், "அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்"என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، وعبد بن حميد، جميعا عن ابي عامر، قال عبد حدثنا عبد الملك بن عمرو، حدثنا عبد الله بن جعفر الزهري، عن سعد بن ابراهيم، قال سالت القاسم بن محمد عن رجل، له ثلاثة مساكن فاوصى بثلث كل مسكن منها قال يجمع ذلك كله في مسكن واحد ثم قال اخبرتني عايشة ان رسول الله صلى الله عليه وسلم قال " من عمل عملا ليس عليه امرنا فهو رد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Judicial Decisions
- Hadith Index
- #4493
- Book Index
- 24
Grades
- -
