ஹதீஸ்கள்
#4486
ஸஹீஹ் முஸ்லிம் - Judicial Decisions
வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي عمر، حدثنا مروان بن معاوية الفزاري، عن محمد بن سوقة، اخبرنا محمد بن عبيد الله الثقفي، عن وراد، قال كتب المغيرة الى معاوية سلام عليك اما بعد فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان الله حرم ثلاثا ونهى عن ثلاث حرم عقوق الوالد وواد البنات ولا وهات . ونهى عن ثلاث قيل وقال وكثرة السوال واضاعة المال
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Judicial Decisions
- Hadith Index
- #4486
- Book Index
- 17
Grades
- -
