ஹதீஸ்கள்
#4311
ஸஹீஹ் முஸ்லிம் - Oaths
அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "(மனந்திருந்தி பாவமன்னிப்புக் கோரினாலே போதும்; பாவமன்னிப்புக் கிட்டும் எனும் நற்செய்தியுடன் வந்த) "தவ்பா"வின் நபி அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابن نمير، ح وحدثنا محمد بن عبد الله بن، نمير حدثنا ابي، حدثنا فضيل بن غزوان، قال سمعت عبد الرحمن بن ابي نعم، حدثني ابو هريرة، قال قال ابو القاسم صلى الله عليه وسلم " من قذف مملوكه بالزنا يقام عليه الحد يوم القيامة الا ان يكون كما قال
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Oaths
- Hadith Index
- #4311
- Book Index
- 58
Grades
- -
