ஹதீஸ்கள்
#4294
ஸஹீஹ் முஸ்லிம் - Oaths
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாயிஃப்” போரிலிருந்து திரும்பிய பின் "அல்ஜிஃரானா" எனும் இடத்திலிருந்தபோது அவர்களிடம் (என் தந்தை) உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) "மஸ்ஜிதுல் ஹராம்" புனிதப் பள்ளிவாசலில் ஒரு நாள் "இஃதிகாஃப்" இருப்பதாக நான் நேர்ந்துகொண்டேன். அது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சென்று ஒரு நாள் "இஃதிகாஃப்" இருப்பீராக!" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு (ஹுனைன் போர்ச் செல்வத்தின்) ஐந்தில் ஒரு பாகம் (கும்ஸ்) நிதியிலிருந்து ஓர் அடிமைப் பெண்ணைக் கொடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தபோது அக்கைதிகள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று கூறிய சப்தத்தை உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், "என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்த கைதிகளை விடுதலை செய்து விட்டார்கள்" என்று கூறினர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "அப்துல்லாஹ்! அந்த அடிமைப் பெண்ணிடம் சென்று அவளது வழியில் அவளை விட்டுவிடு" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள் "ஹுனைன்" போரிலிருந்து திரும்பியபோது, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் அறியாமைக் காலத்தில் ஒரு பகல் "இஃதிகாஃப்" இருப்பதாக நேர்ந்துகொண்டிருந்ததைப் பற்றி வினவினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. அதில் பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்ஜிஃரானா" எனுமிடத்திலிருந்து நிறைவேற்றிய உம்ரா பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், (அதைப் பற்றி அறியாதிருந்த காரணத்தால்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்ஜிஃரானா"விலிருந்து உம்ரா செய்யவில்லை" என்று விடையளித்தார்கள். மேலும், "உமர் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் ஓர் இரவு "இஃதிகாஃப்" மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டிருந்தார்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "ஒரு பகல் "இஃதிகாஃப்" இருப்பதாக நேர்ந்திருந்தார்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، اخبرنا عبد الله بن وهب، حدثنا جرير بن حازم، ان ايوب، حدثه ان نافعا حدثه ان عبد الله بن عمر حدثه ان عمر بن الخطاب سال رسول الله صلى الله عليه وسلم وهو بالجعرانة بعد ان رجع من الطايف فقال يا رسول الله اني نذرت في الجاهلية ان اعتكف يوما في المسجد الحرام فكيف ترى قال " اذهب فاعتكف يوما " . قال وكان رسول الله صلى الله عليه وسلم قد اعطاه جارية من الخمس فلما اعتق رسول الله صلى الله عليه وسلم سبايا الناس سمع عمر بن الخطاب اصواتهم يقولون اعتقنا رسول الله صلى الله عليه وسلم . فقال ما هذا فقالوا اعتق رسول الله صلى الله عليه وسلم سبايا الناس . فقال عمر يا عبد الله اذهب الى تلك الجارية فخل سبيلها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Oaths
- Hadith Index
- #4294
- Book Index
- 41
Grades
- -
