ஹதீஸ்கள்
#4247
ஸஹீஹ் முஸ்லிம் - Vows
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே சாய்ந்தபடி நடந்துவருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்புதல்வர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர் (கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக) நேர்த்திக் கடன் செய்துள்ளார்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "பெரியவரே,வாகனத்தில் ஏறிச் செல்வீராக! (தம்மைத் தாமே வேதனை செய்துகொள்ளும்) நீரோ உமது நேர்த்திக் கடனோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى التميمي، اخبرنا يزيد بن زريع، عن حميد، عن ثابت، عن انس، ح. وحدثنا ابن ابي عمر، - واللفظ له - حدثنا مروان بن معاوية الفزاري، حدثنا حميد، حدثني ثابت، عن انس، ان النبي صلى الله عليه وسلم راى شيخا يهادى بين ابنيه فقال " ما بال هذا " . قالوا نذر ان يمشي . قال " ان الله عن تعذيب هذا نفسه لغني " . وامره ان يركب
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Vows
- Hadith Index
- #4247
- Book Index
- 13
Grades
- -
