ஹதீஸ்கள்
#4181
ஸஹீஹ் முஸ்லிம் - Gifts
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عباد بن العوام، عن حصين، عن الشعبي، قال سمعت النعمان بن بشير، ح وحدثنا يحيى بن يحيى، - واللفظ له - اخبرنا ابو الاحوص، عن حصين، عن الشعبي، عن النعمان بن بشير، قال تصدق على ابي ببعض ماله فقالت امي عمرة بنت رواحة لا ارضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم . فانطلق ابي الى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم " افعلت هذا بولدك كلهم " . قال لا . قال " اتقوا الله واعدلوا في اولادكم " . فرجع ابي فرد تلك الصدقة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Gifts
- Hadith Index
- #4181
- Book Index
- 19
Grades
- -
