ஹதீஸ்கள்
#3678
ஸஹீஹ் முஸ்லிம் - Divorce
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிகநேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் "நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் "தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?" என்று கேட்க வேண்டும்" எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம். அவ்வாறே எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, முன்பு பேசி வைத்திருந்தபடி கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அப்படியெல்லாம் இல்லை.) மாறாக, ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்" என்று கூறினார்கள். ஆகவே, "நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்?" என்று தொடங்கி "நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)" என முடியும் (66:1-4) வசனங்கள் அருளப்பெற்றன. (இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) "நீங்கள் இருவரும்" என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) "நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்"என்று அல்லாஹ் கூறியிருப்பது, "இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக ஒருபோதும் அதை நான் அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதையே குறிக்கிறது. அத்தியாயம் :
وحدثني محمد بن حاتم، حدثنا حجاج بن محمد، اخبرنا ابن جريج، اخبرني عطاء، انه سمع عبيد بن عمير، يخبر انه سمع عايشة، تخبر ان النبي صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش فيشرب عندها عسلا قالت فتواطات انا وحفصة ان ايتنا ما دخل عليها النبي صلى الله عليه وسلم فلتقل اني اجد منك ريح مغافير اكلت مغافير فدخل على احداهما فقالت ذلك له . فقال " بل شربت عسلا عند زينب بنت جحش ولن اعود له " . فنزل { لم تحرم ما احل الله لك} الى قوله { ان تتوبا} لعايشة وحفصة { واذ اسر النبي الى بعض ازواجه حديثا} لقوله " بل شربت عسلا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Divorce
- Hadith Index
- #3678
- Book Index
- 27
Grades
- -
