ஹதீஸ்கள்
#3626
ஸஹீஹ் முஸ்லிம் - Breastfeeding
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் கன்னி கழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, மற்றொரு கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால், (முதலில்) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். ஒருவர் கன்னிப்பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னி கழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னி கழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்குவார். அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்" என்று நான் சொன்னால், அது (தவறாகாது) சரிதான். ஆயினும், அனஸ் (ரலி) அவர்கள், "இதுவே நபிவழியாகும்" என்று (மட்டுமே) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، اخبرنا هشيم، عن خالد، عن ابي قلابة، عن انس بن، مالك قال اذا تزوج البكر على الثيب اقام عندها سبعا واذا تزوج الثيب على البكر اقام عندها ثلاثا . قال خالد ولو قلت انه رفعه لصدقت ولكنه قال السنة كذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Breastfeeding
- Hadith Index
- #3626
- Book Index
- 59
Grades
- -
