ஹதீஸ்கள்
#3554
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "விந்தின் அனைத்து (உயிரணு)க் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்.) அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني هارون بن سعيد الايلي، حدثنا عبد الله بن وهب، اخبرني معاوية، - يعني ابن صالح - عن علي بن ابي طلحة، عن ابي الوداك، عن ابي سعيد الخدري، سمعه يقول سيل رسول الله صلى الله عليه وسلم عن العزل فقال " ما من كل الماء يكون الولد واذا اراد الله خلق شىء لم يمنعه شىء
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3554
- Book Index
- 156
Grades
- -
