ஹதீஸ்கள்
#3450
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள், ஒரு ஹஜ்ஜின்போது தம்முடைய புதல்வர் தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்ய விரும்பினார். அப்போது ஹாஜிகளின் தலைவராக அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். எனவே, உமர் பின் உபைதில்லாஹ், "நான் (என் மகன்) தல்ஹா பின் உமருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று கூறி அபான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அப்போது அபான் (ரஹ்) அவர்கள், "உம்மை நான் ஒரு முரட்டு இராக்கியராகவே கருதுகிறேன். "இஹ்ராம் கட்டியவர் மணமுடிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الملك بن شعيب بن الليث، حدثني ابي، عن جدي، حدثني خالد بن يزيد، حدثني سعيد بن ابي هلال، عن نبيه بن وهب، ان عمر بن عبيد الله بن معمر، اراد ان ينكح، ابنه طلحة بنت شيبة بن جبير في الحج وابان بن عثمان يوميذ امير الحاج فارسل الى ابان اني قد اردت ان انكح، طلحة بن عمر فاحب ان تحضر، ذلك . فقال له ابان الا اراك عراقيا جافيا اني سمعت عثمان بن عفان يقول قال رسول الله صلى الله عليه وسلم " لا ينكح المحرم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3450
- Book Index
- 53
Grades
- -
