ஹதீஸ்கள்
#3420
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (சப்ரா பின் மஅபத் -ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மக்கா வெற்றிப்போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு - பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணைமுறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார். எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந்தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் "கீழ் புறத்தில்" அல்லது "மேற்புறத்தில்" இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்ற (அழகான) கன்னிப்பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், "எங்களில் ஒருவரை "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள இசைவு உண்டா?" எனக் கேட்டோம். அவள், "நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?" என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, "இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது" என்று சொன்னார். உடனே அவள், "இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)" என மூன்று முறை, அல்லது இரு முறை கூறினாள். பிறகு அவளை நான் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்துகொண்டேன். நான் (அங்கிருந்து) புறப்படவில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள். - மேற்கண்ட தகவல் சப்ரா அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அப்பெண் "அந்த மனிதர் (எனக்கு) ஒத்துவருவாரா?" என்று கேட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. என்னுடன் வந்திருந்தவர், "இவரது போர்வை இற்றுப்போன பழைய போர்வை எனக் கூறினார்" என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو كامل، فضيل بن حسين الجحدري حدثنا بشر، - يعني ابن مفضل - حدثنا عمارة بن غزية، عن الربيع بن سبرة، ان اباه، غزا مع رسول الله صلى الله عليه وسلم فتح مكة قال فاقمنا بها خمس عشرة - ثلاثين بين ليلة ويوم - فاذن لنا رسول الله صلى الله عليه وسلم في متعة النساء فخرجت انا ورجل من قومي ولي عليه فضل في الجمال وهو قريب من الدمامة مع كل واحد منا برد فبردي خلق واما برد ابن عمي فبرد جديد غض حتى اذا كنا باسفل مكة او باعلاها فتلقتنا فتاة مثل البكرة العنطنطة فقلنا هل لك ان يستمتع منك احدنا قالت وماذا تبذلان فنشر كل واحد منا برده فجعلت تنظر الى الرجلين ويراها صاحبي تنظر الى عطفها فقال ان برد هذا خلق وبردي جديد غض . فتقول برد هذا لا باس به . ثلاث مرار او مرتين ثم استمتعت منها فلم اخرج حتى حرمها رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3420
- Book Index
- 23
Grades
- -
