ஹதீஸ்கள்
#3399
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் "மினா"வில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, "அபூஅப்திர் ரஹ்மானே! இங்கே வாருங்கள்" என்று கூறி, தனியான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். (திருமணத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு) தேவை உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்கமா இங்கே வா" என என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். அப்போது அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஒரு கன்னிப்பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? நீங்கள் அனுபவித்த இளமைக் காலத்தை அது உங்களுக்கு மீட்டுத் தரக்கூடும்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، قال اني لامشي مع عبد الله بن مسعود بمنى اذ لقيه عثمان بن عفان فقال هلم يا ابا عبد الرحمن قال فاستخلاه فلما راى عبد الله ان ليست له حاجة - قال - قال لي تعال يا علقمة - قال - فجيت فقال له عثمان الا نزوجك يا ابا عبد الرحمن جارية بكرا لعله يرجع اليك من نفسك ما كنت تعهد فقال عبد الله لين قلت ذاك . فذكر بمثل حديث ابي معاوية
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3399
- Book Index
- 2
Grades
- -
