ஹதீஸ்கள்
#3023
ஸஹீஹ் முஸ்லிம் - Introduction
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உரத்த குரலில் ஹஜ்ஜுக்காகத் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். துல்ஹஜ் எட்டாவது நாளன்று நாங்கள் மினாவுக்குச் சென்றபோது (செல்ல நாடிய போது), ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டித் தல்பியாச் சொன்னோம். அத்தியாயம் :
حدثني عبيد الله بن عمر القواريري، حدثنا عبد الاعلى بن عبد الاعلى، حدثنا داود، عن ابي نضرة، عن ابي سعيد، قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم نصرخ بالحج صراخا فلما قدمنا مكة امرنا ان نجعلها عمرة الا من ساق الهدى فلما كان يوم التروية ورحنا الى منى اهللنا بالحج
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Introduction
- Hadith Index
- #3023
- Book Index
- 0
Grades
- -
