ஹதீஸ்கள்
#2912
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக நான் "இஹ்ராம்" கட்டினேன். நான் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்" என்று சொன்னார்கள். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் இரவை நான் அடைந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக (மட்டும்) "இஹ்ராம்" கட்டியிருந்தேன். (இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது) நான் எவ்வாறு ஹஜ் செய்வது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டுக்கொள். உம்ராவை நிறுத்திவிட்டு, ஹஜ் செய்துகொள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு (என்னை "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு,நான் நிறுத்திவைத்திருந்த உம்ராவிற்காக "தன்ஈம்" எனும் இடத்தில் "இஹ்ராம்" கட்டச் செய்தார். அத்தியாயம் :
وحدثنا عبد بن حميد، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة، - رضى الله عنها - قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم عام حجة الوداع فاهللت بعمرة ولم اكن سقت الهدى فقال النبي صلى الله عليه وسلم " من كان معه هدى فليهلل بالحج مع عمرته ثم لا يحل حتى يحل منهما جميعا " . قالت فحضت فلما دخلت ليلة عرفة قلت يا رسول الله اني كنت اهللت بعمرة فكيف اصنع بحجتي قال " انقضي راسك وامتشطي وامسكي عن العمرة واهلي بالحج " . قالت فلما قضيت حجتي امر عبد الرحمن بن ابي بكر فاردفني فاعمرني من التنعيم مكان عمرتي التي امسكت عنها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #2912
- Book Index
- 121
Grades
- -
