ஹதீஸ்கள்
#2781
ஸஹீஹ் முஸ்லிம் - I'tikaf
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் "இஃதிகாஃப்" இருந்துவந்த இடத்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்குக் காட்டினார்கள். அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، اخبرنا ابن وهب، اخبرني يونس بن يزيد، ان نافعا، حدثه عن عبد الله بن عمر، - رضى الله عنهما - ان رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الاواخر من رمضان . قال نافع وقد اراني عبد الله - رضى الله عنه - المكان الذي كان يعتكف فيه رسول الله صلى الله عليه وسلم من المسجد
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- I'tikaf
- Hadith Index
- #2781
- Book Index
- 2
Grades
- -
